பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ -16

125

தோக்கியும் இணைந்தது. விண்வெளி வீரர்கள் முதலில் பூமியைப் படம் பிடிப்பர். பூமியின் மீதுள்ள வளி மண்டலத்தை ஆராய இஃது உதவும். அடுத்து, அம்புலித் தரையின் தொடுவானத்தை நோக்கிப் படம் எடுப்பர். எரிமலை வாயு ஏதாவது அந்த இடத்திலிருந்தால் இப்படத்தில் துலங்கும். அம்புலித் தரையிலிருந்து வானியல் படங்கள் எடுக்கப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

2 வெப்பம் பரவுதல் சோதனை (எச். எஃப். இ): அம்புலித் தரையில் இரண்டு துளைகளை இட்டு அம்புலியின் உட்புறத்திலிருந்து வெப்பம் வெளியேறும் அளவினை அளந்தறியும் சோதனை இது.

3. இயற்கை நில அதிர்வுச் சோதனை (பி. எஸ். இ): பூமியில் தில அதிர்ச்சிகளை அளப்பதற்கு உதவும் கருவி போன்ற ஒரு கருவியினால் அம்புலித் தரையில் இயற்கையாக ஏற்படும் மிகமிகச் சிறிய அதிர்வுகளும் இச் சோதனையால் அளந்தறியப் பெறும்.

4. செயற்கை தில அதிர்வுச் சோதனை (ஏ. எஸ். . இ) அம்புலித் தரைக்கு அடியிலுள்ள அமைப்பை ஆராய்வதற்காக அங்குச் செயற்கையாகச் சில அதிர்வுகள் உண்டுபண்ணப் பெறும். அந்த அதிர்வுகளின் விளைவு ஒன்றுக்கொன்று 46 மீட்டர் தொலைவில் வைக்கப்பெறும் இரண்டு உணர்வுக் கருவிகளால் அளவிடப்பெறும்.

5. நிலாத்தரை காத்தமண்டல ஆய்வு {எல், எஸ். எம்.) : எடுத்துச் செல்லக்கூடிய காந்தமானியின் உதவியால், பல இலக்குகளில் அம்புலியின் காந்த மண்டலம் அளந்தறியப் பெறும்.

6. கதிரவக் காற்று ஆய்வு : - கதிரவனிடமிருந்து மிகமிக நுண்ணிய துகள்கள் பெரும்பாலும் இடைவிடாமல் புறத்தே எறியப் பெறுகின்றன. இவை கதிரவ மண்டலம் முழுவதும் பரவுகின்றன. இந்தப் பரவல் நிலையைத்தான் கதிரவக் காற்று என வழங்குகின்றனர். இக் காற்றின் வேகம்