பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அம்புலிப் பயணம்

சரியாக இருத்தல் வேண்டும். அப்படியிருந்தால்தான் விண்கலம் சந்திர மண்டலத்தில் மெதுவாக இறங்கும். மேலும் பாதுகாப்பாக இருப்பதற்கு அம்புலியில் இறங்கும் பகுதியாகிய 'அம்புலி ஊர்தி'(Lunar module)யில் ஆறு மீட்டர் உயரமுள்ள நான்கு கால்கள் உறுதியான 'வில் அமைப்புக்களுடன்

படம், 5 : சந்திரனில் இறங்கும் பகுதியைக் காட்டுவது. (வில் அமைப்புக்களைக் கவனித்திடுக).

பொருத்தப்பெற்றுள்ளன. நான்கு கால்களைக் கொண்ட கூண்டுபோன்ற இந்த அமைப்பு விண்கலத்தின்பக்கவாட்டில் மடிக்கப்பெற்ற நிலையில் பொருத்தப் பெற்றிருக்கும். சந்திரனில் இறங்குவதற்குச் சற்று நேரத்திற்கு முன்னர்தான் இது தாய்க்கலத்தினின்று விக்கப்பெறும்.

திரும்பும் பயணம் : சந்திரனிலிருந்து திரும்பும் பயணமும் மேற்கூறிய பயணத்தைப் போன்றதே. இப்போது சந்திரனிவிருந்து குறைந்தது மணிக்கு 8,400 கி.மீ. வேகத்துடன் கிளம்பவேண்டும். இந்த வேகத்தில் திரும்பினால்தான் சந்திரனிவிருந்து 3,85.600 கி.மீ. தொலைவிலுள்ள 'திரிசங்கு சுவர்க்கம்' என்று குறிப்பிட்டோமே, அந்த இடத்தை வந்தடையலாம். அந்த இடத்தைக் கடந்ததும் நாம் 3,45,600 கி.மீ., தொலைவிலுள்ள சாய்வு தளப் பாதையைக் கடந்தசக வேண்டும். இப்போதும் நாம் வரும் வேகத்தைத் தணித்தாக வேண்டும். இல்லையெனில் நாம் பூமியின் காற்று மண்டலத்தில் மணிக்கு 40,000 கி.மீ. வேகத்தில் விழுவோம். காற்று மண்டலத்தைக் கடந்து பூமிக்கு வருவதற்குள் . காற்றின் உராய்வால் எரித்து சாம்பரரய் விடுவோம். காற்று மண்டலத்தில் நுழையும் - கோணமும் மிகச் சரியாக இருத்தல் வேண்டும். அக்கோணம்