பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அம்புலிப் பயணம்

கொண்டு வந்து இறக்கினார் இந்த மாபெரும் வீரர். அத்த இடத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் விமானங்களில் ஒன்று அவரை மீட்டு அருகிலிருந்த கப்பலில் சேர்த்தது.

இரஷ்யாவிலும் இந்த விண்வெளிச் செலவு சுறுசுறுப்பாக நடைபெற்றது. அமெரிக்க வீரர்கள் விண்வெளியை அடைவதற்கு முன்னதாகவே இரஷ்யா, யூரிககாரின் என்பவரை விண்வெளிக்கு அனுப்பி அழியாப் புகழ்பெற்றது.[1] இவர் சென்ற விண்வெளிக் கலம் வாஸ்டாக். 1 என்பது. ஒரு முறை வலம் வந்த பிறகு இவர் பூமியை வந்தடைந்தார். இவரை அடுத்து அனுப்பப் பெற்ற மேஜர் டிட்டோல் (Major Titoy) என்பார் பூமியைப் பதினேழு முறை வலம் வந்து பூமியை வந்தடைந்தார்.[2] இவர் சென்ற கலம் வாஸ்டாக்-2 என்பது. அதன் எடை நாலரை டன். அடுத்துச் சென்ற இரஷ்யாவின் இரட்டை விண்வெளி வீரர்கள் எதிர்கால விண்வெளி நிலையத்திற்கு அடிகோலும் வகையில் அரியதொரு செயலை ஆற்றினர். வாஸ்டாக்-3 கலத்தில் நிக்கோலாவ் (Nikolayev] என்பாரும்,[3] இவர் சென்ற மறுநாள் வாஸ்டாக்-4 கலத்தில் பொட்ச் (Popvich) என்பாரும் அனுப்பப் பெற்றனர். இரண்டு கலங்களும் சென்ற சுற்று வழிகள் கிட்டத்தட்ட நெருங்கி, இருந்தன ; இருவரும் ஒருவரோடொருவர் வானொலி மூலம் தொடர்பு கொண்டிருந்தனர். நிக்கோலாவ் 64 சுற்றுக்களும், பொப்விச் 48 சுற்றுக்களும் சுற்றிய பின்னர்ப் பூமியை வந்தடைந்தனர். அடுத்து, ஒரு பெண்ணை விண்வெளிக்கு அனுப்பி இரஷ்யா பெரும்புகழ் அடைந்தது. வலேரி பிகோவ்ஸ்கி என்ற வீரரை வாஸ்டாக்-5 கலத்திலும்,[4] இரண்டு நாள் கழிந்த பின்னர் வாலண்டினா தெரஸ்கோவா என்ற வீராங்கனையை வாஸ்டாக்-6 கலத்திலும் இரஷ்யா, அனுப்பி வைத்தது. வாஸ்டாக்- 5 பூமியை 88 நிமிடங்களுக் கொருமுறையும்,


  1. 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள்.
  2. 1861 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் நாள்
  3. 1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு 11 ஆம் நாள்.
  4. 1963 ஆம் ஆண்டு சூன் 14 ஆம் நாள்.