பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திட்டமிட்ட வெற்றிச் செயல்கள்

33

வாஸ்டாக்-6 83.3 நிமிடங்களுக் கொருமுறையும் - பூமியை வலம் வந்து கொண்டிருந்தன. வாஸ்டாக் 6 விண்வெளிக்குச் சென்ற முப்பது நிமிடங்களில் வாஸ்டாக்.5 உடன் தொலை பேசித் தொடர்பு கொண்டது. இரண்டு கலங்களும் பல்வேறு சோதனைகளை முடித்துக் கொண்டு பூமியை வந்தடைந்தன.[1] பிகோவ்ஸ்கி விண்வெளியில் 4 நாள்கள் 25 மணி 54 நிமிடங்கள் பயணம் செய்து பூமியை 82 தடவைகள் வலம் வந்தார். தெரஸ்கோவா 2 நாள்கள் 22 மணி 57 நிமிடங்கள் பயணம் செய்து பூமியை 49 முறை சுற்றினார்.

இங்ஙனம் இரு நாடுகளும் விண்வெளிச் செலவினை மேற்கொண்டு பல அரிய சாதனைகளைப் புரிந்தன. 1963-இல் இத் திட்டம் நிறைவு பெற்றது.

ஜெமினித் திட்டம் : இத் திட்டத்தில் இரண்டு வீரர்கள் தங்குவதற்கேற்ற விண்கலம் அமைக்கப் பெற்றது. கூண்டில் இரண்டு வீரர்களை இருக்கச் செய்து, அஃது ஓர் இராக்கெட்டு மூலம் விண்வெளிக்கு அனுப்பப் பெற்றது. இந்த விண்கலம் வாரக் கணக்காகப் பூமியைப் பன்முறை வலம் வந்த பின்னர்ப் பூமியை வந்தடைந்தது. இத் திட்டமும் வெற்றியுடன் செயற் படுத்தப்பட்டுவிட்டது. இத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பெற்ற பன்னிரண்டு விண்வெளிச் செலவுகளும் வெற்றியுடன் நிறைவேறின. அம்புலியில் இறங்குவதற்குத் தேவையான எல்லாத் துறை - நுட்பச் சோதனைகளிலும் வெற்றி கண்டனர். விண்வெளியில் முன்னேற்பாட்டின்படி குறிப்பிட்ட இடத்தில் விண்வெளி வீரர்கள். சந்தித்தல், இரண்டு விண்வெளிக் கலங்களை இணைத்தல், மனிதன் நீண்ட காலம் தொடர்ந்து விண்வெளியில் இருத்தல்- இவை இத் திட்டத்தின் முதல் நோக்கங்களாக இருந்தன. இவை இத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப் பெற்ற விண்வெளிச் செலவுகளால் நிறைவேறின. மனிதர்கள் விண்வெளிக் கலங்களைத் திறம்படக் கையாள முடியும் என்பது மெய்ப்-


  1. 1963 ஆம் ஆண்டு சூன் 19 ஆம் நாள்.

அ-3