பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அம்புலிப் பயணம்

வைத்தே அனுப்பப் பெற்றது.[1] இதுவும் பூமியின் சுற்று வழியிலேயே இயங்கியது. கலத்தின் கருவித் தொகுதியிலிருந்து சேமித்த நிலையிலிருக்கும் திரவ நீரியத்தையும் (Hydrrigen) திரவ உயிரியத்தையும் {Oxygen) பூமியின் இழுவிசை சூன்யமாக இருக்கும்பொழுது தனியாகப் பிரிக்க முடியுமா, கலத்தின் இயக்கம் நின்றுபோனால் அதனைத் திரும்பவும் இயங்கச் செய்ய முடியுமா. என்பவற்றைச் சோதித்தலே இப் பயணத்தின் நோக்கங்களாகும். இவற்றைத் தவிர, நான்காவது சுற்றுவழியில் அழிதலில் கொண்டு செலுத்தும் அமுக்கம், அமைப்புபற்றிய சோதனைகளையும் செய்து பார்த்தல் வேண்டும்.

அப்போலோ -3 ; இந்தப் பயணம் கென்னடி முனையிலிருந்து மேற்குப் பசிபிக் மாகடலை நோக்கி மேற்கொள்ளப் பெற்றது.[2] இந்த விண்வெளிக் கலமும் சாட்டர்ன் - 1இல் வைத்தே இயக்கப்பெற்றது. இந்தப் பயணமும் ஆளில்லாத பயண்மேயாகும். கட்டளைப் பகுதி (Ceramand Module) பணிப் பகுதி (Service Module) இவற்றின் துணை அமைப்புகளிலும், விண்வெளிக் கலத்தின் ஏற்புடைமையிலும், அமைப்பின் உருக்குலையா நிலையிலும் சோதனைகளை மேற்கொள்ளல்; அதிக வெப்பத்துடன் கலம் திரும்பி வருங்கால் விண்கலத்தின் கவசம் சரியாக இருக்கின்றதா என்பதைச் சோதித்தல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றலே இப்பயணத்தின் குறிக்கோளாகும். இப்பயணமும் இனிதாக நிறைவேறியது.

அப்போலோ -4 : பயண ஒத்திகை நடைபெற்ற போது - எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக வர்ஜில் கிரிஸம் (Virgi! Grissom), எட்வர்ட் வொயிட் (Edward White), ரோஜர் சேஃபீ (Roger Chaffee) என்ற மூன்று விண்வெளி வீரர்கள் இறந்த பிறகு[3] மேற்கொள்ளப் பெற்ற ஆளில்லாத முதற் பயணமாகும் இது.[4] அன்றியும், மூன்று விண்வெளி


  1. 1986ஆம் ஆண்டு சூலை 5 ஆம் நாள்.
  2. 1986ஆம் ஆண்டு ஆகஸ்டு 25-ஆம் நாள்.
  3. 1967 ஆம் ஆண்டு சனவரி 27ஆம் நாள்.
  4. 1967ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் நாள்.