பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அம்புலிப் பயணம்

அம்புலி ஊர்தியைத் தாய்க்கலத்தினின்றும் தனியே பிரித்து வின்வெளி ஏகும் துணிவுமிக்க செயலை மெக்டிவிட், ஷ்லைக்கார்ட் என்ற விண்வெளி வீரர்கள் நிறைவேற்றினர், 180 கி. மீட்டருக்கு அப்பால் சென்ற அம்புலி ஊர்தி தாய்க் கலம் சென்று கொண்டிருத்த சுற்றுவழிக்குமேல் உயரமான மற்ருெரு சுற்று வழியில் சென்று கொண்டிருந்தது. அதை அந்த வாயிலேயே விட்டு விட்டால் இரண்டிற்குமுள்ள தொலைவு இன்னும் அதிகமாகிக்கொண்டே போகும். எனவே, திரும்பி வருவதற்காகத் தம்மை விமானி அம்புலி ஊர்தியின்

படம். 14 : அம்புலி ஊர்தி, கட்டளைப்பகுதி, பணிப்பகுதி ஆகியவை சேர்ந்த தாய்க்கலத்தினின்றும் பிரிந்த பிறகு மீண்டும் சந்திப்பதைக் காட்டுவது

பொறியை இயக்கினார். ஆற்றல் மிக்க இந்தப் பொறியை - இயக்கித்தான் சந்திரனின் தரையிலிருந்து மேலே வருதல் வேண்டும். இந்தப் பொறி இயக்கத்தின் பயனாக அம்புலி ஊர்தி தாய்க்கலத்தை நெருங்கிய தாழ்வான பாதைக்கு இறங்கியது. இரண்டு மணி நேரத்தில் அம்புலி ஊர்தி தாய்க்கலத்திற்கு முன்னே சென்றுவிட்டது ; அந்தக் கீழ்ப்