பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 கிடந்த என் வில்லையும் புட்டிலையும் கடைக்கண்ணுல் கவனித் துக் கொண்டேன். பாறை அருகில் வருமுன்பே, சட்டென்று வில்லையும் புட்டிலையும் எடுத்துக்கொண்டு, ஒரே பாய்ச்சலில் வெளியே குதித்துப் பாறையைப் பற்றிக் கொண்டு, என் முழுப் பலத்துடன் ஒடத்தைப் பின்புறமாகக் கால்களால் எற்றினேன். அவ்வள்வுதான், ஓடம் வெகு தூரம் சென்றுவிட்டது. நான் பாறையிலேறி இங்கு வந்து விட்டேன்! நவோடி : இறைவனுடைய மாய உதவிதான் இது என்ல்ை இந்தக் கதையை நம்பவே முடியவில்லை! அந்தப் படுபாவி கவர்னர் புயலுக்குத் தப்பிப் பிழைத்துவிட்டால், இன்னும் படாத பாடு படுத்துவானே !! இப்பொழுது நீ எங்கே போக வேண்டும்? கிடல் : கவர்னர் புருன்னனில் இறங்கி சுவிஸ் வழியாக என்னைத் தம் மாளிகைக்குக் கொண்டுபோக வேண்டும் என்று படகில் பேசிக்கொண்டார்கள். பூவோடி: தரை மார்க்கமாகவே போகத் திட்டமிட்டிருந்தார் கள்ோ? அப்படியானல், உடனே நீ எங்காவது ஓடி மறைந்து கொள்ள வேண்டும்! இனியும் ஆண்டவன் என்ன செய் வார்! எல்லாம் உன் பொறுப்புத்தான்! tடல்: அது சரிதான்; ஆர்த்துக்கும் குஸ்ட்ைடுக்கும் இங்கி ருந்து குறுக்குப் பாதை எது, சொல்லு! ருவோடி : ஸ்டீனன் வழியாக ஒரு பெரிய பாதை உண்டு. அதிலே போளுல் யாரும் கண்டுகொள்ள முடியும் . அதை விடச் சுருக்கமான பாதை லோவர்ட்ஸ் வழியாகப் போகிறது. என் ப்ையனைக் கூட்டிப் போ; அவன் காட்டுவான் அந்த வழியை. திடல்: (கையை நீட்டி அவன் கையைக் குலுக்கிவிட்டு) வணக்கம் ! கடவுள் அருள் செய்வார் ! (போகும்போது அவன் திரும்பிப் பார்க் கிருன்.) - ரூட்லியிலே நடந்த நம்மவர் கூட்டத்திற்கு நீயும் போயிருந் தாயல்லவா ? உன் பெயரையும் சொன்னதாக நினைவிருக் கிறது !