பக்கம்:அம்மையப்பன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பல : வழக்கமா? பூங்காவனம் யோசித்துப்பார்... நீ. அந்த வேங்கைபுரத்தாரை விவாகம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டிருந்தால் இந்த பதினைந்து வருட காலமாக எத்தனை லட்சம் பொன் மீதமாயிருக்கும்— கொட்டிக் கொட்டி அழுதிருக்கிறேனே அந்த கொடுமையாளர் ஆட்சி பீடத்துக்கு ......

பூங்: அதற்காக... என் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ள முடியுமா? .....

பல : அபிப்ராயம், பெரிய அபிப்ராயம்!.. பல வருஷ காலமாக உன்னைத் திருமணம் செய்து கொள்ள முயற்சித்து கடைசியில் பிரமச்சரிய விரதம் பூண்டிருக்கிறான் ... வேங்கை நகர் மன்னன்...நீயோ அவனை வெறுக்கிறாய்.

பூங்: அண்ணா... திருமணப் பேச்சு பேச வேண்டிய நேரமோ, பருவமோ இல்லை எனக்கு... தயவு செய்து என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்... அந்தப் பாழும் கல்யாணப் பேச்சு வேண்டாம்! வேண்டவே வேண்டாம்.

பல : இப்படி அழுது அழுது தான் பழுதூரையே பாழ்படுத்திவிட்டாய் நீ...உன்னோடு பேசி என்ன பயன் எனக்கு....

மடாலயம்

(பொன் மெருகேறிய பீடமொன்றில் மாய்கை நாத சாமியார் அமர்ந்திருக்கிறார்...அருகில் பல தேவர், அவர் பக்கத்தில் அவரது மனைவியும் சுகதேவும்; காவலாளி திருசங்கும்; மற்றவர்களும் நிற்கின்றனர்.)

மாய்கைநாதர்: மகான்களைப் பற்றி நேற்றுச் சொன் னேனல்லவா? மகான்கள் அடிக்கடித் தோன்றுவதில்லை. ஆனால் அப்படித் தோன்றும் மகான்களால் ஆகாதது எதுவுமே இல்லை ... கடலை வற்ற வைப்பர்; கசனத்திலே மிதந்திடுவர்.. கடவுளுடன் பேசுவர்... கரும்பிலே கசப்புக் காட்டுவர்; காகத்தையும் கந்தர்வ கானம் எழுப்பச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/10&oldid=1770039" இலிருந்து மீள்விக்கப்பட்டது