98
98 னான். சினா நாள் இரண்டு நாள் உலகத்தைப் பற்றிபே பிறகு உலகைப் படைத்தவனின் உத்தம குணங்களை ணங்களை விளக் கினான். கடவுள் அவதாரங்களும் காதல் லீலைகள் புரிந்த தாக வர்ணித்தான். மாயக் கண்ணன்- மன்மதன்-ரதி தேவி- மகேசன் பார்வதி-வள்ளி மணவாளன்-பிரம்மா. திலோத்தமை-மேனகா விஸ்வாமித்ரன்-இப்படி எல்லாம் புராணக் கதைகள் சொன்னான்-போதை நிறைந்த இவன் வார்த்தைகள் என் புத்தியைத் தடுமாற வைத்து விட்டன... விவரிப்பானேன் - வீழ்ந்தேன்.... வீழ்ந்தேன்... தமிழச்சி கட்டிக் காக்கும் கற்பு நெறியிலி ருந்து வீழ்ந்தேன்... சந்நியா• சத்தை விட்டுவிடுகிறேன் - சம்சார வாழ்வு தொடங்கு கிறேன் என்றான். கடைசியில் கருவிலே முத்தனும் வந் தான்! ஊர் கை கொட்டிச் சிரிக்கும் உன்னை மணந்தால் என்று காரணம் கூறி, என்னை கை விட்டு விட்டான்! முத்த னின் தந்தை இவன்! நான்தான்தாய்! - L க சுக : ஒ!... இதுதானா அத்தை காரணம்? வேங்கை நாட்டு மன்னரை கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன் என்று நீ சொன்னது ஏன் என்று இப்போது அல்லவா புரிகிறது று பூப: ஹ...ஹ...ஹ!... பற்றற்ற துறவிக கள் புழுதி யைக்கூட நாடமாட்டார்களாம்-நீரோ பூங்காவனத்தையே நாடி இருக்கிறீர்...ஹ...ஹ...ஹ! பல : பூபதி! ஐயாயிரம் பொன் தருகிறேன், இந்த அவமானச் செய்தியை வெளியே சொல்லாதீர்!... ஐயாயிரம் பொன்! பூப : எனக்கு வேண்டாம் முன்பு ஒருமுறை நான் பொன்னுக்கு அடிமைப்பட்டதால் இந்த போலி வேடதாரி இத்தனை நாள் வெளிச்சம் போட முடிந்தது!...பெருமையுள்ள பிரபுவே! இனியும் இந்த ரகசியத்தை மூடி வைத்துப் பயனில்லை- உடனே சென்று முத்தனைக் காப்பாற்றுங்கள்...