பக்கம்:அம்மையப்பன்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

100 திமிருக்கு போட்டதிரை கிழிந்து விட்ட காரணத்தால் தேடிவந்தீர்களோ மகனை ?... மத மாளிகை கௌவரத்தை பாதுகாக்கும் தாய்! வெறிக்கு சாமரம் வீசும் தகப்பன்!... பத்தினியாக வேஷம் போட்டாள் தாய்!... பக்தனாகக் கூத்தாடினான் தகப்பன்!... அறியாத கன்னிபோல் வாழ்ந்தாள் அம்மை !... அடியாரின் தலைவனாய் வாழ்ந்தான் அப்பன்! - ய - மாக நல்லவர் அம்மை அப்பர்களே! அவலக்ஷண ஜீவன்களே! அச்ச மத்தின் புதிய பதிப்புகளே! கற்பிழந்தவள் கன்னியாக வாழ்ந்தாளாம்-காமாந்தகாரன் சாமியாராகத் திரிந்தானாம்! இந்தக் கயமையின் உருவங்களுக்கு கடைசி நேரத்திலே ஞானோதயம் பிறந்து விட்டதாம் !... வந்து விட்டார்கள் துக்கம் விசாரிக்க வகைகெட்ட வஞ்சகர்கள் ! மதிப்பு கெடக்கூடாது - மகன் கெட்டாலும் பரவாஇல்லை என்ப வள் மாதாவாம்!... மக்கள் ஆதரவு குறையக் கூடாது மகான் என்ற பெயர் மாறக் கூடாது - மகனைப் பற்றி கவலை யில்லை யென்றவன் பிதாவாம்! இந்த கள் மருமகளைத் தேற்ற வந்து விட்டார்கள்! மானங்கெட்ட வர்கள். ஆடினார்களாம், பாடினார்களாம்- ஆனந்தம் அனுபவித்தார்களாம் - அதன் அடையாளச் சின்னம் பிறந் ததும் விஸ்வாமித்திரன் மேனகைபோல் வீண் கௌரவத் தைக் காப்பாற்றிக் கொண்டார்களாம்!- விதியற்றவர்கள்!... அறுந்து போன தந்தியை ஒட்டவைக்க வந்து விட்டார்கள், அன்றொரு நாள் அதே வீணையைப் புழுதியில் ஏறிந்த புண்யாத்மாக்கள்!... போங்கள் இதை விட்டு ; போய்விடுங் கள் இப்போது! உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முத்தன் இங்கில்லை! இன்றில்லா விட்டால் நாளை உங்களுக்கு மட்டுமல்ல : உங்களைப் போன்ற உலுத்தர்களுக்கு பதில் சொல்ல என் வயிற்றிலே வளர்கிறது வாள் ! போலி மதிப் பைக் பொசுக்கும் தீ !... மக்களை ஏமாற்றி வாழும் மதயானை களை மாய்க்கும்! வேல் என் வயிற்றிலே வளருகிறது —அது சொல்லும் சூதுக்காரர்களுக்குப் பதில் !.. சூழ்ச்சிக்காரர் பதில்!.. களுக்குப் பதில் !... சூடான பதில்! சுயமரியாதைப் பதில்!... என் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/102&oldid=1723640" இலிருந்து மீள்விக்கப்பட்டது