பக்கம்:அம்மையப்பன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

101 அந்த பதிலுக்குக் காத்திருங்கள் பாவிகளே !.. என் முத்தனை அநியாயமாகக் கொன்ற பாவிகளே! அந்த பதி லுக்குக் காத்திருங்கள்- • மாய்: முத்தாயி! முத்தன் சாகமாட்டான்... முத்: சாமியார் நடையில் பேசும் தத்துவார்த்தமா? .. சொர்க்க லோகத்தில் சுகமாக இருப்பார் என் முத்தன் என்கிறீரா?... பூதவுடல்தான் அழியும்;புகழுடல் அழியாது என்று கூறுகிறீரா! மாய் : இல்லை ! பலதேவர் சக்ரவர்த்தியை சந்திக்கப் போயிருக்கிறார் - முத்தனுக்கு விடுதலை கட்டாயம் கிடைத் துவிடும் !... சுகதேவ்: அதோ !... அப்பாவும் வந்து விட்டார். என்னப்பா! என்ன ஆயிற்று ? முத்தனுக்கு விடுதலையா?... [பலதேவர் தலை குனிகிறார்] முத்தாயி: என் முத்தனுக்கு விடுதலைதான்! இந்த உலகத்திலிருந்து என் ஆசை முத்தனுக்கு விடுதலைதான்! உங்களைப் போன்ற துரோகிகள் வாழும் பூமியிலிருந்து என் அன்பு புத்தனுக்கு விடுதலைதான்! விடுதலைதான்! (ஓடுகிறாள்... வெறி பிடித்தவள் போல] சிறைச்சாலை [கதவு திறக்கப்படுகிறது! முத்தாயி ஓடிவருகிறாள்] முத்: அத்தான்!...

முத்தன்: இன்பமே! கலங்காதே ! இன்று நமக்கு கடைசி நாள் ! கடைசி சந்திப்பு !... கா தல் பாடும் உன் கண் களை இனிநான் பார்க்க முடியாது ! தேன் பொழியும் உன் அதரங்களின் தித்திப்பை இனி நான் சுவைக்க முடியாது இன்னும் இரண்டொரு வினாடிகள் : அதற்குமேல் உன்னைப் பற்றிய இன்ப நினைவுகளை இந்த ஏழை முத்தனால் சுமக்க முடியாது!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/103&oldid=1723641" இலிருந்து மீள்விக்கப்பட்டது