102
102 முத் : அத்தான்! நம்மை யாரும் பிரிக்கவே முடியாது -நானும் உங்கள் பின்னாலேயே வருவேன். முத்தன்: உம்... பைத்தியம் ! ஏதோ காதலர்களுக் காக ஒரு உலகம் கட்டிவைத்திருப்பதாகவும், அந்த உலகத் தில் செத்துப்போன காதலர்கள் குடியேறலாம் என்றும்• யாரோ ஒரு ஆசைக்காரன், கிறுக்கி வைத்துவிட்டுப் போனான்! அதை நம்பி நீயும் பிணமாகிவிடாதே! உயிர் விடப்போகும் நான் உன்னிடம் கேட்கிற ஒரே ஒரு அன்பு உத்திரவு முத்: எதுவானாலும் கேட்கிறேன்... முத்தன் : நீ சாகாமல் IT GOT... முத் வாழ வேண்டுமென்பது ஆ!... நான் வாழ முடியாதவள் அத்தான்-இனி நான் வாழக்கூடாது... ய நீள் வாழக் முத்தன் : உம்... நீயா வாழக்கூடாது? இந்த வையத்தில் யார் யாரோ வாழ்கிறார்கள் -நீதானா கூடாது? நீசத்தனம் படைத்தோன் - மோசக்குணம் உடை யோன் - நேசத்தை முறிப்போன் -பாசத்தை உடைப்போன்- அனைவரும் வாழ்கிறார்கள்.என் அமுதமே! நீதானா வாழக் கூடாது? யுத்தம் யுத்தமெனப் பித்தம் பிடித்தலையும் ரத்த வெறியனும் வாழ்கிறான், என் சித்திரப் பாவையே நீதானா வாழக்கூடாது? என் செல்வமே! இந்த வையகத்தில் வாழ் வாரைக் கண்டு வயிறெரியும் வஞ்சகனும் வஞ்சகனும் வாழ்கிறான்- நெஞ்சமிலாக் கொடியோனும் வாழ்கிறான்-என் வைர முழு நிலவே! நீதானா வாழக்கூடாது? உழைக்க ஒருவன் - தழைக்க - ஒருவன் என்று கூறி, அழைப்பில்லாமல் வந்தவன் ஆனந்த மாகத்தான் வாழ்கிறான், அஞ்சுகமே! யார் சொன்னது நீ வாழக் கூடாது என்று?...என் ஆருயிரே! தாண்டவம் புரிந்திடும் ஆண்டவன் நான்-ஆகவே இந்த உண்டியலை நிரப்புங்கள் என்று கூறி ஊரை ஏய்த்து வாழும் பட்டு பீதாம்பர பரதேசியாம் மாய்கைநாத சாமியார் வாழ்கிறார்-- கொட்டு முழக்கோடும், கொடிபிடிப்போர் ஆயிரவரோடும்! 9