பக்கம்:அம்மையப்பன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

103 el அந்த பாம்புகள் வாழலாம், பைங்கொடியே! நீ வாழக் கூடாதா?... அமுதூரும் அழகுத் திருநகரை பழுதூராக்கி பொன்னையும், பொருளையும் சுரண்டியது போதாதென்று, மண்ணையும் அடிமை கொண்ட மகோன்மத்தனாம்7 வேங்கை நாட்டான் வாழ்கிறான், எடுபிடிகளோடு, ஏராள மானச் செல்வாக்கோடும்! கப்பம் கட்டுவோர்-காவடி தூக்குவோர்-கட்டியம் கூறுவோர் -- கால் கழுவிப் பிழைப் போர்- களிப்போடுதான் வாழுகிறார்கள் கண்ணழகி, இந் தக் காசினியில்!... நிலாப் பதுமையே! நீ மட்டும் வாழக் கூடாது ஏன்று யார் சொன்னது? • - முத் : புலிக் காட்டில் மான் அத்தான்?.. வாழ முடியுமா முத்தன் : மானம் புலி நகத்தைவிட கூர்மையானது மலர்க்கொடியே! கானம் பாடும் வானம்பாடிகள், கழுகுக்கும் வல்றுருக்கும் மத்தியிலே வாழத்தான் வேண்டி இருக் கிறது, என் அன்பே ! நான் போனபிறகு நீயும் இந்த பண்பிலா மனிதர் கூட்டத்திடையே வாழத்தான் வேண்டும். வாழ்வது உனக்காக அல்ல ; உன் வயிற்றிலே வளரும் நம் காதல் களஞ்சியத்தை-பிள்ளைக் கனியமுதை- பேசும் - பொற் சித்திரத்தை - நான் காணமுடியா விட்டாலும் நீ கண்டுகளிப்பவள் : அதைக் காப்பாற்ற வேண்டியவள்;... அனாதை முத்தனின் வம்சம் அடியோடு அழிந்து விடவில்லை என்று இந்த உலகத்தின் காதிலே உரக்கச் சொல்லப் போவது, உயிரே, அந்த இன்பச் செல்வந்தானே ! அந்த எதிர் காலத்தை நினைத்து இப்போதே நான் ஒரு சந்தோஷ பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்.... முத்: அத்தான்..... முத்தன்: அழாதே கண்ணே ! அழாதே! உன்னை சிரித்த முகத்தோடு என் சிந்தை குளிர ஒருமுறைப் பார்க் கிறேன்.எங்கே என் செந்தமிழே ! சிரிப்புக் காட்டு... முத்: அத்தான்....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/105&oldid=1723643" இலிருந்து மீள்விக்கப்பட்டது