பக்கம்:அம்மையப்பன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

105 பூங் : மகாராஜா! என்னை மன்னித்து விடுங்கள். நான் தங்களுக்கு பெரிய தவறுதான் செய்து விட்டேன். தங்க ளுக்கு மட்டுமல்ல; மாதர் குலத்துக்கே நான் தவறு செய்து விட்டேன்! மகாராஜா, என் மகனை எப்படியாவது விடுதலை செய்யுங்கள்! அர : பூங்காவனம்! நான் உன்மீது வைத்திருத்த அன்புக்காக மட்டுமே முத்தனை விடுவிக்கலாம். ஆனால் முத் தன் வேங்கை நாட்டின் விரோதி!... விடுதலை விரும்பி!... அவனை விடுவிக்க சட்டம் கிடையாது... பூங் : மகாராஜா!... முத்தன் சாகவேண்டியது தானா?... என் மகன் சாகவேண்டியது தானா?... அப்படியா னால் என்னையும் கொன்று விடுங்கள்... அர : கவலைப்படாதே! முத்தன் இதுவரையில் என் இதயத்திலே குடியிருந்தவளின் மகன் என்பதற்காக விடு தலை செய்யப்படுகிறான்!.. நகரின் வீதி [முத்தன் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படு கிறான்... பெருங்கூட்டம். இடையே முத்தனின் நண் பர்களும் இருக்கின்றனர். மாய்ைைகநா தஸ்வாமி கள், பலதேவர், சுகதேவ், இவர்களும் இருக்கின்ற னர். முத்தனின் நண்பர்கள் ஏதோ சைகை மூலம் பேசிக்கொள்கின்றனர்... திடீரென்று கூட்டத்தில் குழப்பம் உண்டாகிறது. முத்தனின் நண்பர்கள் முத்தனை கொண்டு சென்று விடுகின்றனர் குழப் பம் முடிகிறது. வீரர்கள் கருப்பு முகமூடியணிந்த கைதியை முத்தன் என்றெண்ணி தூக்கு மேடைக்கு இழுத்துக் கொண்டு போகின்ற னர்] தூக்குமேடை (முக்காடிட்ட உருவம் தூக்கிலிடப்படும்போது கயிறு வெட்டப்படுகிறது. பூங்காவனம் ஓடிவருகிறாள்]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/107&oldid=1723645" இலிருந்து மீள்விக்கப்பட்டது