106
பூங்: முத்தா!... முத்தா!...
(முகத்தை மூடியுள்ள துணியை விலக்குகிறாள். அங்கே மாய்கைநாதர் தெரிகிறார்... அலறுகிறாள்]
பூபதி : என்ன இது? முத்தனுக்கு பதில் சாமி யார்?... இது எப்படி?...
சுக : பெரியவரே!...நான் சொல்கிறேன்! சாமியார் எப்படி மாறினார் என்று எனக்குக் தெரியும்...முத்த னுடைய தோழர்கள் முத்தனை விடுவித்து அவனது கருப்பு. உடைகளை கழற்றி எறிந்து விட்டு துடிவிட்டார்கள்...அதைப் பார்த்த சாமியார் உடனே அந்த உடையை தான் போட் டுக்கொ கொண்டு முத்தன் போல் நின்றார்...இந்த ஏமாந்து போய் சாமியாரை முத்தன் என்று இப்படி-இது மாதிரி - நடந்து விட்டது.
வீரர்கள்
நினைத்து
மாய்கை : யாரும் ஆச்சரியப்பட வேண்டாம்! நானே தேடிக்கொண்ட முடிவுதான் இது. என் குற்றங்களுக்கு பிராயச்சித்தம் செய்து கொண்டேன். என் மகனுக்காக நான் செய்யும் முதலும், கடைசியுமான தியாகம் இதுதான்! பட்டினத்தாரும், டு சித்தர்களும், பண்புடை துறவிகளும் வாழ்ந்த பூமியில் நானோர் களங்கமாக வந்தேன். இதோ, ஒழி கிறேன்! பூங்காவனம்; பூங்காவனம்! என்னை மன்னித்து விடு! என்னை மன்னித்து விடு! எல்லோரும் நன்னை மன்னித்து விடுங்கள்! மன்னி த்து
விடுங்கள்!...
(பேச்சு முடிகிறது; சாமியாரின் வாழ்வும் முடிகிறது) வெளியே
(முத்தாயி விழுந்து கிடக்கிறாள். முத்தனும், அவன் தோழர்களும் வருகிறார்கள் ] முத்: முத்தாயி! முத்தாயி!... முத்தா: அத்தான்! முத்: கண்மணி!... (பூங்காவனம் - பலதேவர் - பூபதி- சுகதேவ் வருகிறார்கள்]