பக்கம்:அம்மையப்பன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


பூங்: முத்தா... முத் : இளையராணி!... பூபதி: முத்தா!... இளையராணி உனக்குத் தாய் !.... உன்னை பெற்றெடுத்த தாய்!... முத் ஆ... முத்தா: ஆமாம் அத்தான்! அவர்கள்தான் உங்கள் தாய் ! முத்: தாயா ?... அம்மா!... உங்களை எப்படி யெல் லாம் தவறாக நினைத்து விட்டேன்-என்னை மன்னித்து விடுங்கள் அம்மா! மன்னித்து விடுங்கள்!.. பூங்: முத்தா!... பூபதி: முத்தா !...காதலும், தாய்மையும் வெற்றி பெற்று விட்டது!... இனி கடமையிலே வெற்றிபெற வேண் டும் நீ!...கண்ணீர்த் துளியோடு சேர்த்து வளர்ந்த கர்ம வீரனே! தாயகத்து விடுதலைக்கு போராடும் தகுதி படைத்த தளபதி நீதான் !... முத்தாயி, நீயும் உன் கண வனும் பழுதூர் விடுதலைக்குப் பாடுபடுங்கள்... சோலையிலே தென்றலிலே சொகுசு! பின்னர்- சொந்த நாட்டைக் காப்பாற்ற சுழற்று வாளை! முத்: அறிவேன் அய்யா! காதலிலே களிதையிலே களம் போகும் பேச்சு!... கணவனுக்கும் மனைவிக்கும் தாயகமே மூச்சு!... அருமைத் தோழர்களே! அன்புத் தம்பிமார்களே!... அனைவரும் புறப்படுங்கள்!... அன்னையின் விலங்கொடிப் போம்! பழுதூரை மீட்போம்! வாரீர்! தம்பி யுடையான் படை க்கஞ்சான்! இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்!...வாரீர்! வாரீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/109&oldid=1723649" இலிருந்து மீள்விக்கப்பட்டது