9
செய்வர்...அத்தகைய அருட்சக்தி பெற்றவர்கள் அவர்கள். வீரர்கட்கும் விவேகிகட்கும் மண்ணிலே தான் புகழ்... ஆனால் மகான்கட்கோ விண்ணிலும் புகழ். ஆகவே தான் சொல்லுகிறேன். வாளையும் வேலையும் தொடாதே வைகுந்த வாசனைத் தொழு. கையிலே கேடயம் ஏந்தாதே. கைலாச நாதரின் திரு நீரை ஏந்து...நீ யார்? நான் யார்? தாய் தந்தை அண்ணன், தம்பி எல்லாம் வீண்; முடிவில் ஒரு பிடி மண்.
[எல்லோரும் வீபூதி பெற்றுச் செல்கிறார்கள்]
[பூபதி வருகை]
மாய்கை: வாரும் பூபதி... வாரும். உம்மைப் பார்த்து பல ஆண்டுகளாகி விட்டனவே! தாடியெல்லாம் வெளுப்பேறி விட்டதே.
பூபதி: ஆமாம்!
மாய்கை: தளிர் சருகாகத்தானே மாறும். தாடி வெளுப்பாவதிலே என்ன ஆச்சர்யம்.
பூபதி : ஒன்று சொன்னீர். அதுவும் நன்று சொன்னீர். உண்மை; உள்ளங்கை நெல்லிக்கனி...
மாய்கை : என்ன பூபதியாரே வெளிநாட்டுப் பிரயாணங்கள் எப்படியிருந்தன. உமது மருத்துவத் தொழில் முன்னிலும் பன் மடங்கு சிறப்படைந்திருக்குமென்று எண்ணுகிறேன் — அதற்கு உமது சுற்றுப் பயணம் பயன்பட்டதல்லவா!—
பூபதி : நிச்சயமாகப் பயன்பட்டது. இருபது ஆண்டு இடைவிடாத அலைச்சல் வீண் போகவில்லை— மாயத்தாலும் மந்திரத்தாலும் தீர்க்க முடியாதவைகளை மருத்துவத்தால் தீர்க்கலாம் என்ற உண்மையை......
மாய்கை: அம்மையப்பா — தெய்வத்தால் ஆகாத தொன்றில்லை.
[வேதாளம் வருகை]
வேதாளம் : ஸ்வாமி நமஸ்தே
மாய்கை: என்ன வேதாளம்.