10
வேதாளம்: ஸ்வாமிகளுக்கு காணிக்கைகள் வந்திருக்கிறது நிறைய. அதை எடுத்து வந்தேன்...
மாய்கை : காணிக்கை...வாழ்க பக்தர்கள்! எவ்வளவு வேதாளம்.
வேதாளம்: கணக்கற்ற பொன் நாணயங்கள்.
மாய்கை: சந்தோஷம்! அதோ இருக்கிறது உண்டியல்.
[வேதாளம் போதல்]
பூபதி : சாமிகள் பொன்னைத்தொடுவது கிடையாதோ
சாமி: விஷம் — விஷம்!!......
பூபதி: அந்த விஷத்திலே வளருவது தானே இந்த விருக்ஷம்!... சாமியாரே! வெளிநாடு சென்று திரும்பியிருக்கும் எனக்கு நீர் ஓர் வெகுமதி தரவேண்டும்——தருவீரா?
சாமி: வெகுமதியா? என்ன பூபதி.
பூபதி: அந்த புதையலை என் கண்ணிலே காட்ட வேண்டும்.
சாமி: புதையல்?
பூபதி: பொன்னோ வைரமோ அல்ல சாமியாரே... உம்மிடம் புதைந்து கிடக்கும் அந்த ரககியத்தைத்தான் கேட்கிறேன்...
சாமி : ரகசியம்!
பூபதி: ஆமாம் இப்போதாவது சொல்லக் கூடாதா?
சாமி: உயிரை வாங்காதீர்; இருபது வருடமாய் போய் இருந்தீரே இப்போது இங்கு ஏனய்யா வந்தீர்...?
பூபதி : ஏன் வந்தேனா—சொல்கிறேன், நீரும் இருபது ஆண்டுகளாகத்தான் அந்த ரகசியத்தை மறைத்துக் கொண்டு வாழ்கிறீர்! ஹ—ஹ—ஹ—சாமியாரே குதிரை தன் ஆகாரத்தை கோணியிலே மறைத்துக் கொண்டு சாப் பிட்டாலும் அது கொள் என்று தெரியாமலா போய் விடுகிறது. ஹ-ஹ-ஹ!