11
11 குதிரைக் கொட்டடி ★ குதிரை கொள்தின்று கொண்டிருக்கிறது. ஒரு பையன் மெள்ள மெள்ள திருட்டுவிழி விழித்துக் கொண்டு அந்தப் பக்கம் வருகிறான். பிறகு கொள்ளுப்பையில் கையை விட்டு, கொள்ளை எடுத்து அவனும் சாப்பிடு கிறான்...அப்போது திருசங்கு அங்கு வருகிறான் .. பையனின் தலையில் ஒரு அடிவிழுகிறது... ... திரு; திருட்டுக் கழுதை, யாருடா நீ ! என்னடா முழிக்கிறே -துப்புகீழே... ம்... துப்பு... இனிமேல் வருவிய இங்கே ஆங்... [...முத்தன் வந்துபிடித்துக் கொள்கிறான்...] முத்: ஏன்... அவனை அடிக்கிறீர்கள். திரு : நீ நீ வந்துட்டியா - சிபார்சுக்கு... முத்தா-நீ குதிரை பார்த்துக் கொள்கிற லக்ஷணம் நன்றாயிருக்கிறது திருட்டுபய பிள்ளைகள் எல்லாம் அரண்மனைக் குள்ளேயே வந்துட்டுதுங்க திருடருத்துக்கு!
முத் பசி பொறுக்காமல் இந்தப் பசலைப் பையன் கொஞ்சம் கொள்ளை சாப்பிட்டு விட்டால் அது திருட்டா? உலகத்தில் யார் யாரோ எதை எதையோ திருடுகிறார்கள்.
திரு : சரிதான் பாளையக்காரர் சொத்தை நீயே பசி காரர்களுக்கு பங்கு போட்டு கொடுத்திடுவ போலிருக்கு. முத் நான் கொடுக்காவிட்டாலும். அந்தக் காலம் வரத்தான் போகிறது. இந்தா தம்பி நீ ஓடிப்போ ...... (கொள்ளை எடுத்துக் கொடுக்கிறான்) திரு : காவேரி எவ்வளவு நல்லவ, அவ வயத்திலே வந்து இப்படி ஒரு புள்ளே பொறந்துதே!........ 930 - (போகிறான்-ஒரு வீரன் வருகிறான்.) வீர : முத்தா!...வாள் வித்தை கற்றுக் கொள்ள குமார ராஜா வருகிறார்.