பக்கம்:அம்மையப்பன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

12 முத்: யாரது! குமார ராஜாவா? அது சரி!....... வீர : ஆமாம்! இளவரசன் சுகதேவ் ...... முத்: இளவரசன், குமாரராஜன்!... இவன் வேறல்ல புதுப் புது பட்டமா அள்ளி வீசுகிறான்.......எப்பா கொஞ் சம் தகுதி பார்த்து கொடப்பா பட்டத்தை; எது... இப்ப என் னா வாள் பயிற்சி கத்துகிட்டு பழு தூருக்கு விடுதலை வாங்கித் தரப் போகிறாராக்கும்.. பெரிய வீராதி வீரர்... சரி... சரி... போ... இதோ வர்ரேன். வாள் பயிற்சிக் கூடம்

சுக : வீராதி வீரன் நான்- எதிரிகள் எந்தப் பக்கம் இருந்து வந்தாலும் சரி- அவர்களை எதிர்த்து முறியடிப் பேன்... அக்ரோணிக் கணக்கிலே சேனைகள் வந்தாலும் சரி! அவைகளைப் பானைகளைப் போல் அடித்து நொறுக்குவேன், கோட்டைகளை முற்றுகையிட்டாலும் சரி... கொலு மண்ட பத்தில் நுழைந்துவிட்டாலும் சரி. எதிர்த்து விரட்டி... அடித்து... உதைத்து பகைவர்களைத் தாக்கித் தவிடு பொடி யாக்கி... ரத கஜ துரக பதாதிகள் எல்லாவற்றையும் படு சூரணமாக்கி விடுவேன் உம்.. ஆமாம்.. எந்தக் கையிலே கேடயம் வச்சிக்கிறது, எந்தக்கையிலே கத்திவச்சிக்கிறது. அடேய் அதை மட்டும் சொல்லிவிட்டா. ல் . .. (முத்தன் வருகிறான் ஆ!...இவனைக் கேட்டால் தெரியும்... முத்தா!... இன் னும் இரண்டு நாளில் நான் பெரிய வாள் வீரனாகிவிட வேண்டும். முத்: ஓ... வால் வீரனாகி விடலாம். சுக : என்ன! வால் வீரனா?.... முத்: அடடே தவறி வந்துவிட்டது. பரவா இல்லை ... வால் வீரர் அனுமாரைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர் Con?......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/14&oldid=1723543" இலிருந்து மீள்விக்கப்பட்டது