13
சுக : ஆமாம்... ஆமாம் அசோகவனத்தில் சீதையிடம் போனவர்...
சரி... சரி...வா
(வாள் வீச ஆரம்பிக்கின்றனர்; முத்தன் கொஞ்சம் வேகமாகச் சுழற்ற.....)
ம்... இவருகிட்டயா நடக்கும்.
(மீண்டும் சண்டை)
ஏய்... இரு... இரு எங்காவது படாத இடத்தில் பட்டு உயிர் போய்விடப் போகிறது... கொண்டா அதை...
[அவனே போய் நீண்ட வாள் ஒன்றும் கட்டாரி ஒன்றும் எடுத்து வருகிறான் அங்கு நிற்கும் வீரனைப் பார்த்து.]
சுக : டேய்... நீ போ,
(முத்தனிடம்)
இந்தா... இதைப்பிடி... இப்போது பார்ப்போம் யார் ஜெயிப்பது என்று...
முத்: இருங்கள் இது போர் செய்யும் இலக்கணமே அல்ல.....
சுக: இலக்கணமே எனக்குத் தேவை இல்லை.
(முத்தன் மீது வாளை வீச, அது பட்டு விடுகிறது. இதை கவனித்த பூங்காவனம் ஓடி வருகிறாள்......)
பூங்: சுகதேவ்!... ... என்ன இது விபரீதமான விளையாட்டு.
சுக : கத்தி விளையாட்டு. நீ ஏன் அத்தை இதில் தலை யிடுகிறாய்! முத்தா! காயத்துக்கு மருந்து போடு வருகிறேன்.
[சுகதேவ்போகிறான் உடனே பூங்காவனம் துணியைக் கிழித்து கட்டுகிறாள்...]
(திகிலுடன்) முத்: இளையராணி...