14
பூங்: பரவா இல்லை முத்தா, நானே கட்டி விடுகிறேன்.
[அவள் கண்களில் நீர் கலங்குகிறது...]
முத்: யுவராணி ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்...
பூங்: ஒன்றுமில்லை முத்தா... இந்தா இதை சாப்பிடு நான் வருகிறேன்—யாராவது வந்து விடுவார்கள்...
மறைத்து வைத்திருந்த பழங்களை கொடுத்துவிட்டு போய் விடுகிறாள் முத்தன் பழங்களுடன் திகைத்து நிற்கிறான்.
சுகதேவன் அறை.
[சுகதேவ் கண்ணாடியில் தன் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறான். திரிசங்கு கடிதத்துடன் அங்கு வருகிறான்]
சுகதேவ் : என் அழகைக் காண இந்தக் கண்ணாடி போதாதே ஹும்-–-திரிசங்கு: எனக்கா ஓலை?
திரிசங்கு: இல்லை தம்பி. எனக்குத்தான்.
சுகதேவ்: யாரிடமிருந்து?
திரிசங்கு : அவன் ஒரு வேலையற்றவன். பொழுது விடிந்தால் என் உயிரை வாங்குவதே அவனுக்கு வேலை.
சுகதேவ் : உயிரை வாங்குறானா? யாரப்பா அந்த எமன்?
திரிசங்கு: அதை ஏன் தம்பி கேட்கிறீங்க. எனக்கு ஒரு மருமகப் பயல் இருக்கிறான். அவனுக்குப் பெண் வேண்டுமாம்.
கசுதேவ்: ஏன்? பிறப்ப தெல்லாம் ஆணாகப் பிறக்கிறதோ?
திரிசங்கு: இல்லை தம்பி இல்லை. கல்யாணத்துக்குப் பெண் வேண்டுமாம்.
சுகதேவ்: கல்யாணத்துக்குப் பெண்ணுதான் வேணும். வேறே என்ன வேணும்; அதுதானே திருமணத் துக்கு மூலப் பொருள்.