15
திரிசங்கு: தம்பி! மரம் பழுத்தால் வௌவால்களை வா என்றா அழைக்கிறது.
சுகதேவ்: ஆமாம்! ஆமாம்! பழுத்த மரமும், பாழடைந்த மண்டபமும் வௌவாலை வா என்று அழைப்பதில்லை. சரி! அதுபோல... ...
திரிசங்கு: என் மகள் பருவமடைந்து விட்டாள். பயல்கள் வலை வீசுகிறார்கள், அதற்குத்தான் ஓலை எழுதி யிருக்கிறான் இந்த உதவாக்கரை. என் மகளின் அழகென்ன குணமென்ன - அத்தான் முறைக்காக மட்டும் இத்தப் பயல் உரிமை கொண்டாடி விட முடியுமா தம்பி.
சுகதேவ்: ஒஹோ! அவ்வளவு அழகா உன் மகள்-
திரிசங்கு: நீங்கள் பார்த்ததே இல்லையா?
சுகதேவ்: இல்லையே உன் மகளின் பெயரென்ன?
திரிசங்கு: முத்தாயி — முத்தாயி என்றால் முத்தாயிதான்.
சுகதேவ்: உம் — காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சுதானே.
திரிசங்கு: இல்லை தம்பி. இது காக்கை அடை காத்த குயிலின் குஞ்சு.
சுகதேவ்: திரிசங்கு! வாயேன் உன் வீட்டுக்குப் போகலாம்.
திரிசங்கு : விளையாடாதீங்க — அரண்மனைக் காவல்காரன் வீட்டுக்கு இளவரசர் வருவதாவது வேடிக்கை ... வேடிக்கை.
சுகதேவ்: என்னிடத்திலே அந்த உயர்வு, தாழ்வு இல்லையென்பது உனக்குத் தெரியாதாக்கும். நீ என் தந் தைக்குத்தான் வேலைக்காரன். எனக்கு ஒரு வயதான தோழன்.சரிதானா?
திரிசங்கு: நான் பாக்கியசாலி.
சுகதேவ்: வா போவோம்.