16
[முத்தன் - முத்தாயி - காதல் கீதம் பாட்டு முடியும் தருவாயில் சுமதி தன் இடையில் இருபுறங்களிலும் இரண்டு குடம் தண் ணீருடன் வருகிறாள். குடங்களை தூரத்தில் வைத்துவிட்டு முத்தன், முத்தாயி இருவரையும் பார்த்து தன் இரு கண்களையும் பொத்திக் கொண்டு அவர் களிடம் வந்து]
சுமதி: முத்தாயி! போகலாமா?
முத்தாயி: என்ன சுமதி! கண்ணை மூடிக்கொண்டாய்?
[கண்ணைத் திறந்து கொண்டு]
சுமதி: கார்யமாகத்தான். நேரமாகிறது. வா போகலாம்
முத்தாயி: போய் வரட்டுமா?
சுமதி: அந்த உத்திரவுமட்டும் அங்கே கிடைக்காது.
முத்தாயி: ஏது உன் தோழி பெரிய கைகாரிதான் போலிருக்கு.
சுமதி: கைகாரி மட்டுமல்ல-கால்காரி - சுழுத்துக்காரி- தலைகாரி.
முத்தன்: போதும்! போதும்! நீ வேறு காரி காரி முகத்திலே துப்பாதே.
முத்தாயி: சரி! நான் வருகிறேன். ஏ சுமதி! கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பிக் கொள். இதோ வந்து விடுகிறேன்.
[சுமதி திரும்பி நிற்க, “இச்” என்ற ஒரு ஒலி சுமதியின் முகத்தில் எதிரொலிக்கிறது]
திருசங்கு வீட்டின் கொல்லைப்புறம்.
★
[முத்தாயி தண்ணீர் குடத்துடன் வருகிறாள்.]