பக்கம்:அம்மையப்பன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

திரி: முத்தாயி !... முத்தாயி !

முத் : என்னப்பா ?......

திரி : எங்கம்மா போயிட்டே? உன்னை நான் எங்கெல்லாம் தேடறது... யாரு வந்திருக்கான்னு பாரு ...தம்பீ வாங்க .சீ... சீ... உன்னையாரு கூப்பிட்டது...?

(ஆடுவருகிறது; அதைத்தொடர்ந்து சுகதேவ் வருகிறான்.)

நீங்க வாங்க தம்பீ!.. வெட்கப் படாதேம்மா... யாருமில்லை... இளவரசர் சுக தேவ் இவர்தான்.

முத் : வணக்கம்...

சுக : வாழ்க! ... வாழ்க!... ஆஹா! ... கைகள் குவிவதும் விரிவதும் கமல மலர்போல் காட்சியளிக்கிறது. திரிசங்கு; நீ சொன்னது அவ்வளவும் உண்மைதான் ... ஐயோ பாவம்! வெட்கத்தால் கன்னங்கள் சிவந்தே விட்டன, மிளகாய் பழம்போல—

[முத்தாயி உள்ளே போய்விடுகிறாள்]

திரி : பார்த்த உடனேயே இப்படி பரிகாசம் செய்ய லாமா தம்பி நீங்கள்.

சுக : ஆங்... என்ன சொன்னேன்?...எனக்குத் தெரியாமலே ஏதாவது சொல்லிவிட்டேனா என்ன?... ம்...திருசங்கு உன்னை ஒன்று கேட்கிறேன்... மறுக்க மாட்டாயே...

திரி : நீங்கள் பாளையக்காரர் பலதேவரின் மகன் இளவரசர்... நான் கேவலம் உங்கள் வேலைக்காரன். கேட்காமலேயே எடுத்துப் போகும் உரிமை இருக்கிறது. உங்களுக்கு...

சுக : ஆஹாஹா .த்சு....த்சு.... கண்கள் சுழலுகின்றன...காது கேட்க மறுக்கிறது... நா அசைய மாட்டேன் என்கிறது... அய்யய்யோ! இருதயம் ஓடவே இல்லை......

திரி : தம்பீ!... தம்பீ!... என்ன இது நான்போய் வைத்தியரை அழைத்து வரட்டுமா ...... ?

சுக : வேண்டாம் வேண்டாம், இது வைத்தியமில்லாத வியாதி... கண்ணொடு கண்நோக் கொக்கின் ... அதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/19&oldid=1771096" இலிருந்து மீள்விக்கப்பட்டது