18
வது காதல் எனும் கள்மொந்தையில் ஒரு ஈ போல வீழ்ந்து. விட்டேன்!
திரி : தம்பீ!... இன்றுபோய் நாளை வாருங்கள்; காரியம் வெற்றி... ...
சுக : "இன்றுபோய் நாளைவா" அடடே! இந்த வார்த்தையை எங்கேயோ கேட்டமாதிரி இருக்கிறதே ... உம்... ஆமாம், கம்பராமாயணத்தில்... இராமன் இராவணனை அப்படித்தான் வரச்சொல்கிறான்... அய்யோ! மறுநாள் வந்த இராவணனுக்கு வெற்றி கிடைக்கவில்லையே; மரணமல்லவா கிடைக்கிறது......
திரி : மறு நாள் வந்த ராமனுக்கு வெற்றிதானே... தம்பி...
சுக : ஓ!... அப்படியானால் இந்த ராமன் கட்டாயம் நாளை வருவான்...
திரி : கட்டாயம் வாருங்கள்...
சுக : வராமல் இருப்பேனா?— திருசங்கு வீடு ஒரு தாமரைத் தடாகம்; அங்கு பறந்து வரும் வண்டு இந்த சுக தேவ்...வருகிறேன். திருசங்கு...
திரி : சரி தம்பி !...
(போகிறான். திருசங்கு கோபமாக)
திரி: முத்தாயி!... முத்தாயி!...
முத்: என்னப்பா! போய்விட்டாரா அந்த மனிதர்?..
திரி : மனிதரா ?...
முத்: இல்லை... இல்லை.. மன்னிக்கவும்; தவறிச் சொல்லி விட்டேன்...
திரி: மன்னிப்பதா... இளவரசரே வீட்டுக்கு வந்திருக்கிறார்...இப்படித்தான் அவமானப் படுத்துவதா?...
முத்: இளவரசர்...ம்... மோசமான வாலிபன்...
திரி : யார் மோசம்? அவனுக்கென்ன அழகிலே குறைவா?..அந்தஸ்திலே குறைவா?..அசட்டுப் பெண்ணே- அவனுடைய அறிவை நீ உணரமாட்டாய்..