பக்கம்:அம்மையப்பன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

முத்: உணர முடியாத அளவுக்கு இந்த உத்தமரின் அறிவு ஊசி முனையைவிடச் சிறியது போலும்! இல்லையா அப்பா?...

திரி: போதும் நிறுத்து - அவன் நினைத்தால் ஊர்வசி ரம்பையெல்லாம் ஒடிவருவார்கள்...

முத்தாயி: இதிலென்னப்பா ஆச்சரியம்? ஆஸ்ரமத்து முனிவர்களிடமே ஓடிவந்தவர்கள் அரண்மனைக்காரர்கள் அழைத்தால் அட்டியா சொல்லப் போகிறார்கள்! வருவார்கள் அப்பா வருவார்கள்—

திரிசங்கு: வாயைமூடு வாயாடி! நான் கெஞ்சிக் கூத்தாடி அவரை வீட்டுக்கு அழைத்து வந்தேன்: நீ அவர் முகத்தில் கரி பூசி அனுப்பி விட்டாய்.

முத்தாயி: இல்லையே - அதற்குள்தான் போய் விட்டாரே — அப்பா! அப்பா! அவர் முகத்தில் கரி பூசினால் இன்னும் அழகாக இருப்பார் கார்மேக வண்ணன் போல.

திருசங்கு: ஜாக்கிரதை - காதில் விழுந்தால் கண்ணைப் பிடுங்கி விடுவார்.

முத்தாயி: கண்ணப்ப நாயனாரோ?

திருசங்கு: சீ! பேச்சுக்குப் பேச்சு பதில் பேசிக் கொண்டு.

[முத்தாயி சிரித்தபடி உள்ளே ஓடி விடுதல்]


பலதேவர் மாளிகை

பலதேவர்: ஆயிரக் கணக்கிலே படை வீரர்கள் இருக்கும் போது, வீர தளபதி வேலழகர் நீங்கள் இருக்கும் போது; வேங்கை நகரத்து அரசர் யாருக்காகப் பயந்து கொண்டு படையை இன்னும் பெருக்குகிறார்?

வேலழகன்: படையைப் பெருக்குவது பயத்திற்காக அல்ல... பாதுகாப்புக்காக பலதேவரே. சிறுத்தை யூரான் வேங்கை நகரின் மீது எப்போது பாயலாம், எந்தக் காரணம் கிடைக்கும் களம் அமைக்க என்று காத்துக் கிடக்கிறான். அதனால் தான் படை பெருக்கும் முயற்சியில் கிறிதும் தடைகூடாதென நம் மன்னர் உத்தர விட்டுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/21&oldid=1771111" இலிருந்து மீள்விக்கப்பட்டது