21
21 திரிசங்கு அது இல்லை தம்பி-போங்க நீங்க- எனக் கென்ன இந்த எழவு காதல் வர்ணனையெல்லாமா தெரியுது. சுகதேவ் : அப்படியானால் முத்தாயிக்கு என் மீது காதல். ஆஹா! திரிசங்கு! உன்னைப்போல ஒரு அப்பனும் அந்த அப்பனுக்கு முத்தாயி போல ஒரு மகளும் இருந் தால் உலகம் வெகு விரைவில் எதிர்ப்பில்லாத காதல் சோலையாக மாறிவிடும். முத்தாயி! நீயும் நானும்.. அய்யோ எப்படி வர்ணிக்கிறதுன்னே தெரியலியே திரிசங்கு! நம்ப நூல் நிலையத்திலே கம்பராமாயணம் இருக்கிறதா? திரிசங்கு: என்ன தம்பி! காதலுக்கும், கம்பராமா யணத்துக்கும் என்ன சம்பந்தம்? சுகதேவ் : அய்யய்யோ! முக்கால் வாசி ராமாயணமே அது தான், ஆஹா! கவிச்சக்கரவர்த்தி கம்பர் காதலைப் பற்றி எப்படி வர்ணித்திருக்கிறார் தெரியுமா... ஒரு பாட்டு கேளு திரிசங்கு... கோமுனியுடன் வரு கொண்டல் என்றபின் தாமரைக் கண்ணினான் என்ற தன்மையால்... ஆம்... அவனே கொல் என்று ஐய நீங்கினாள்... வாமமேகலையி வளர்ந்தது...ம் போச்சு, அதற்கு மேல் மறந்து விட்டேன்...வா வா அதைத் தேடலாம். ஆற்றங்கறை முத்தாயி: தேடக் கிடைக்காத தங்கம் நீங்கள்.. உங்களிட மிருந்து என்னைப் பிரித்துவிட முயலுகிறார் அப்பா. முத்தன்: உன் அப்பா நினைப்பதும் சரிதானே. இளவரசன் சுகதேவ் எங்கே? நான் எங்கே? அரண்மனை யிலே குதிரை தேய்ப்பவன் நான்... தாயை இழந்தவன்... தகப்பன் யாரெனத் தெரியாதவன்... உற்றார், அற்றவன்... தனி மனிதன். உறவினர் முத்தாயி: தனி மனிதர்... நட்சத்திரங்கள் கூட்ட மாய்த்தான் இருக்கின்றன. நிலவு தனியாகத் தானிருக் கிறது. ஆனால் அல்லி மலர் எதிர்பார்ப்பது நிலவைத்தானே?