பக்கம்:அம்மையப்பன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

23 முத்தாயி கேள்விப்பட் டிருக்கிறேன்... கவிஞன்... காதலன்... பித்தன்... மூவரும் ஒரே வகை என்று. கவிஞன் வானத்துத் தாரகையைப் பார்த்து 'ஏ, விண்மீன்களே! யாரைப்பார்த்து கண் சிமிட்டுகிறீர்கள்' என்று சண்டை க்கு போவானாம். காதலனோ வெண்ணிலாவைப் பார்த்து-'என் காதலி எங்கே என்று' கேட்டுப் புலம்புவானாம். நிலவைத் தூது போகச் சொல்வானாம். அந்த இருவருமே பித்தர்கள் என்பார்கள் வேடிக்கைக்கு... அது உண்மையாகத்தான் தெரிகிறது, உங்களைப் பார்க்கும்போது... க [தொடுகிறாள்] முத்தன் : உஸ்... தொடாதே... நான்தான் பித்தனா யிற்றே. முத்தாயி: பித்தனானாலும் என் முத்தனல்லவா? பித்தா! பிறைசூடி! பெருமானே! [தொடுதல்] முத்தன் : ஸ்...அம்மா. இரு முத்தாயி. முத்தாயி : ஏன்! தீண்டினால் திருநீலகண்டமா? முத்தன்: யார் சொன்னது அப்படி...முத்தாயி... முத்தாயி: அத்தான்! [சுகதேவ், திரிசங்கு] சுகதேவ் : ஆ! சரிதான்..சரிதான்..மாலை நன்னேரம்.. சோலையின் ஓரம்... திரிசங்கு: இளவரசே! நீங்கள் தவறாக நினைக்கா என்ன தீர்கள், என் பெண்ணை பலாத்காரம் செய்ய ஆரம்பித்திருக் கிறான் இந்தப் பயல். ஏ அறிவு கெட்ட பயலே! காரியமடா? முத்தாயி: அப்பா! திரிசங்கு: நீ பயப்படாதேயம்மா-அவன்

என்னை ஒன்றும் செய்துவிடமாட்டான் - சும்மா பெண்களை மிரட்டு கிற சோம்பேரிப் பயல். முத்தாயி: இல்லையப்பா. [ திடுக்கிட்டு]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/25&oldid=1723555" இலிருந்து மீள்விக்கப்பட்டது