பக்கம்:அம்மையப்பன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24 திரிசங்கு: எனக்குத்தான் எல்லாம் புரிகிறதே...நீ ஏன் இங்கெல்லாம் தனியாக வருகிறாய்? முத்தாயி: சொல்வதைக் கேளுங்கள். திரிசங்கு: நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்; நீ போம்மா வீட்டுக்கு... இந்தப் பாவிக்கு நேராக நிற்காதே... தவறு... போம்மா - போகிறாயா இல்லையா? உம்... போ... [முத்தாயி போகிறாள் கலங்கியபடி] கடவுளே! என் பெண்ணின் மானத்தைக் காப்பாற் றினாய்...உனக்கு கோடி நமஸ்காரம்... இளவரசே! பார்த்தீர் களா இவன் அக்கிரமத்தை [முத்தன் முதுகில் தட்டி] சுகதேவ் : ஏ முத்தா! முனு முணுக்கிறதா முதுகு? அரைப்பட்டினி ஆண்டிப் பயலே! அனாதைக் கழுதை. முத்தன்: தீர்ந்ததா அகராதி? சுகதேவ்: பேசாதே...பேடி நாயே! அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழி இல்லை. காதல் பண்ணுகிறானாம் காதல். முத்தன் : சீமான் மகனே! இருதயத்துக்கும், இரைப்பைக்கும் வித்தியாசம் தெரியாதவனே! உனக்கு காதல் இலக்கணம் சொல்லித் தருகிறேன்... கேள்... பன்னீரிலே குளித்து, பழரசத்திலே நீந்தி, கன்னியர் புடைசூழ கட்டிலறைக்கு சென்றால்தான் வருவேன் என்று சொல்வதல்ல காதல்...காதல் ஒரு நிலவு...அது ஒரு தன்றல்... மாளிகைக்கு மட்டுமல்ல.மண் குடிசைக்கும் வரும்... காதல் பணமல்ல; உன் பளிங்கு மண்டபத்தோடு நின்றுவிட திரிசங்கு: சரிதாண்டா; அதிகப் பிரசங்கித்தனத் தினாலே அயோக்கியத்தனத்தை மறைக்க முடியாது. முத்தன்: அது எப்படி முடியும்... அதற்கு பாளையக் காரர் மகனாகப் பிறக்க வேண்டுமே... சுகதேவ் : சீ! தகப்பன் பெயர் தெரியாத தறுதலை. முத்தன்: உனக்குத் தெரியுமா தகப்பன் பெயர்? [இருவருக்கும் சண்டை]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/26&oldid=1723556" இலிருந்து மீள்விக்கப்பட்டது