பக்கம்:அம்மையப்பன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

• 25 சுகதேவின் தொப்பி மேலே சென்று விடுகிறது. முத்தனின் அடியால் கீழே விழுகிறான் சுகதேவ். பின் எழுந்து திரிசங்கு வைத்திருக்கும் கைத் தடியை வீரத்தோடு வாங்கி முத்தனைத் தாக்கு வதுபோல் சென்று மரத்தில் தொத்தி இருந்த தன் குல்லாவை எடுத்துக் கொண்டு முத்த னிடம் ‘ஏய் முத்தா' ஜாக்கிரதை: ஜாக்கிரதடா என்று தண்ணீரில் வீழ்ந்து விடுகிறான். வீரன் : வேதாளம் : தென்றல் மாளிகை வாங்க... வாங்க... நீங்க தானே வேதாளம்? ஆமாம். வீரன் : அது என்ன, வேதாளம் என்று பெயர் வச் சிருக்கீங்க. உங்க அப்பா, அம்மா விக்ரமாதித்தன் கதை படிக்கிறது உண்டா? வேதாளம்: உண்டு; உண்டு - ஏன்? வீரன்: விக்ரமாதித்தன் கதையிலே ஒரு வேதாளம் வருது -அதைப் படிக்கும் போது நீங்க பொறந்திருப்பீங்க அதனாலே உங்களுக்கு வேதாளம்னு பேரு வச்சிருப்பாங்க. நல்ல வேளையா கிஷ்கிந்தா காண்டம் படிக்கும் போது நீங்க பொறக்காமே இருந்தீங்களே. வாங்க! வாங்க! வீரன் : [வேலழகன் வருதல்; வேதாளம், வீரன் வணங்குதல்] பிரபு! இவர்தான் தாங்கள் கூப்பிட்டு அனுப்பிய வேதாளம். நான் வேலழகன்: ஓ! வேதாளம்! வாரும். உம்மைப் பற்றி நிரம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன். பலதேவரும் சொன்னார் மிகுந்த திறமைசாலி என்று. நான் வந்திருக்கிற காரியம் உமக்குத் தெரியும்; படைக்கு ஆள் திரட்ட என்று. அதற்கு நீரும்... வேதாளம்: நானா! அய்யோ! எனக்கு வாளைத் தூக் கக்கூட சக்தியில்லை. வேலழகன் : நீர் படையில் சேர வேண்டாமய்யா... கொஞ்சம் ஆட்கள் பிடித்துக் கொடும். வேலையில்லாதவர் கள் எத்தனையோ பேர் இருப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/27&oldid=1723557" இலிருந்து மீள்விக்கப்பட்டது