26
26 வேதாளம்: படையில் சேருவதென்றால் பயப்படு வார்களே. வருவதற்கு ஆடு வேலழகன்: பலி பீடத்திற்கு கூடத்தான் பயப்படும். அதற்காகத்தான் மஞ்சள் நீர் தெளித்து, மலர் தூவி, ஆகாரத்தையும் எதிரே நீட்டி ஆசை காட்டுவது; முயற்சி பண்ண வேண்டும். வேதாளம் : சரியான பேச்சு : தங்கள் உத்தரவுப் படியே வேலையை ஆரம்பிக்கிறேன். இன்னொரு விண் ணப்பம். வேலழகன் : என்ன? வேதாளம்: இந்த ஊரில் ஒரு பெரிய சாமியார் இருக்கிறார். அவர் பேச்சை தெய்வப் பேச்சாக எல்லோரும் எண்ணுவார்கள். அவரிடம் சொல்லி படைக்கு ஆள் சேர்க் கும் பிரச்சாரத்தை செய்யச் சொன்னால் நமது வேலை சுலப மாக முடிந்து விடும். வேலழகன்: பொருள் எதுவும் தர வேண்டுமோ அவர் அருளைப் பெற. வேதாளம்: பொருளா? அவர் வாங்கவே மாட்டார். அவர் கையால் பொருளைத் தொடுவதேயில்லை. மடத்தில் ஒரு உண்டியல் இருக்கிறது. அதில் போட்டுவிட வேண்டும். பலதேவர் மாளிகை [பலதேவர் மனைவி, பூங்காவனம் இருவரும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். சுகதேவ் மாடியிலிருந்து இறங்கி வருகிறான். திரிசங்கு ஏதோ வேலையில் ஈடுபட்டிருக்கிறான்.) சுகதேவ்: திரிசங்கு! காரியம் வெற்றி! ஜெயம்... ஜெயமே ஜெயம் திரிசங்கு: என்ன தம்பி? சுகதேவ் அப்பா சம்மதித்து விட்டார். முத்தனை வேலையை விட்டு விலக்க உத்திரவு கொடுத்து விட்டார். பூங்காவனம்: என்ன! முத்தனை விலக்கவா? ஏன்? எதற்காக?