பக்கம்:அம்மையப்பன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28 பூங்: உம்... யார் அந்த முத்தாயி..? முத்: (திகைப்பு; மௌனம்...) பூங்: சொல்ல மாட்டாயா?...உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கொண்ட அவள்யார்?... அழகிதானா?... அருங் குணவதியா?... உனக் கேற்ற சுந்தரிதானா?... சொல்ல மாட் டாயா?.. முத்தா!... அக்தப் பெண்ணுக்காக-நீயும் இள வரசனும் பெரிய யுத்தமே நடத்தி இருக்கிறீர்களா?... முத் : அம்மணீ !... டது பூங் : உங்கள் தகராறின் விளைவு என்ன ஆகி விட் தெரியுமா.. ? உன்னுடைய வேலைக்கே ஆபத்து வந்து விட்டது... உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை யும் இந்தப் பாவி இழந்து விட்டேன்... முத் : இளையராணி!... பூங்: அப்படி அழைக்காதே... [சுகதேவின் குரல் கேட்கிறது. பூங்காவனம் மறைந்து கொள்கிறாள். திரிசங்கு வருதல்... சுக : என்ன எதிர்ப்பதா?... என்னை எதிர்க்க ஈரேழு பதினாலு லோகத்திலும் மனிதர்கள் உண்டா? என்ன சங்கு... திரி : ஊகூம்... திரு சுக : பதினாலு லோகத்தில் என்ன ? சந்திரமண்ட லத்திலும் மனிதர் கிடையாது..சூரியமண்டலத்திலும் கிடை யாது...நட்சத்திர மண்டலத்திலும் கிடையாது.. திரி : கிடையாது தம்பி ... கிடையாது உங்களை எதிர்க்க ஒருத்தரும் கிடையாது.. சுக : ஒருத்தன் இருக்கான் - அவனும் அழிஞ்சான்; ... யாரு?...அவன் தான் இந்த முத்தன்... ஏ, முத்தா !... நீ செய்த குற்றத்திற்காக வழக்கு... விசாரணை... தீர்ப்பு...எது வும் கிடையாது தண்டனையை ஏ ஏற்றுக் கொள் உனக்கு இனி இங்கு வேலை கிடையாது. முத்: நன்றி...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/30&oldid=1723561" இலிருந்து மீள்விக்கப்பட்டது