31
31 ... முத்: கேட்க வேண்டாம்... கோமானின் தங்கை நீங்கள்...ம்... நானோ குதிரை குதிரைக்காரன் ராஜாபர்த்ருஹரி கதைதான் அம்மா கேள்விப் பட்டிருக்கிறேன். இது அதை விடவேடிக்கையாயிருக்கிறது பூங்: முத்தா?... முத் : சரி சரி...இனியும் நான் இங்கே இருந்தால், அடங்கிக் கிடந்து இவ்வாறு அலைமோதும் உங்கள் ஆசை வெள்ளத்திலே எங்கேயோ ஒரு ஆபத்தான மூலைக்கு அடித்துச் செல்லப் படுவேன்... ம்... இந்த அடங்காத பிரியத்தை உங்க உங்களை அடைய முடியாமல் தவித்து பிரமச் சரிய விரதம் பூண்டிருக்கும்... வேங்கைநாட்டு மன்னனிடம் காட்டினால் இந்த நாட்டுக்கு விடுதலையாவது கிடைக்கும். நான் போய்வருகிறேன்.... பூங்: முத்தா...நில் முத்:கூடாது... பூங்காவனத்திலே புயல் புகுந்து விட் டது, அதை எதிர்த்து நிற்க என்னால் முடியாதம்மா முடி யாது; வருகிறேன்! திருசங்கு வீடு திருசங்கு : உம்... முத்தன்... சத்தற்ற சக்கைதான் இனிமேல் -:அரண்மனையில் மட்டுமல்ல - பாளையக்காரர் அதிகாரத்திற்குட் பட்ட எந்த இடத்திலும் வேலை கிடை யாது அவனுக்கு. முத்தாயி: அப்பா! அவருக்கு வேலை கிடைக்கும் வரையில் அவர் நம் வீட்டில் இருந்தால் என்ன? திரிசங்கு: சரிதான்! சர்ப்பத்தோடு விளையாடாதே என்கிறேன் நான்; நீ அதையே கொண்டு வந்து எனக்கு மாலையாகவும் போடுவேன் என்கிறாய். முத்தாயி ! நான் சொல்வதைக்கேள். கண்ணைத் திறந்து கொண்டு கள்ளிக் காட்டில் நடக்க எவனும் துணிய மாட்டான். ய முத்தாயி: கள்ளிக்காடல்ல அப்பா - காதற் சோலை திரிசங்கு: வாயை மூடு-இல்லாவிட்டால் நானாவது காதை மூடிக்கொள்கிறேன். தரித்திர நாராயணனிடம்