பக்கம்:அம்மையப்பன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

டாண்மை 33 ருக்கத்தான் செய்யும்.. தேளுக்கு இடம் தேடிக் கொடுத்துவிட்டு தேன் துளிகளுக்கு ஆசைப்பட முடியுமா?... வேங்கை நாட்டான் பழுதூர் பாளையக்காரரை மிரட்டுகிறான்... பாளையக்காரர் நம்மை மிரட்டி அந்த ஆத் திரத்தைத் தீர்த்துக் கொள்கிறார்... வீட்டு ரோஜாக்களைக் கசக்கி எறியும் காட்டு ராஜா தர்பார் நடத்துவானாம் பாளை யக்காரரின் மகன்... அதை நான் கேட்பது தவறாம்? குதிரைக் காரனாம் நான்! கோபுர மேறிகளாம் அவர்கள்! உம்.. கொஞ்சம் உயர்ந்த அடிமைகள்: அவ்வளவுதான்! [நண்பர்கள் சிரிக்கிறார்கள்...] சிரித்துப் பயனில்லை நண்பர்களே-சிந்திக்க வேண்டும். சிலந்திக்கூடாக கூடாக மாறிவிட்ட நம் பழுதூரை சிங்காரப் பூக் காடாக மாற்ற வேண்டும்!... [வேதாளம் வந்தபடி] வேதாளம்: மாற்றுவப்பா ; மாற்றுவ!... இந்த உள்ளங்கை இடத்துக்கு உள்ள வாடகையைக் கொடுக்க உன்னால் முடிய வில்லை...நீ பழுதூரை பூக்காடாவும் மாற்றுவ!. புஷ்பக் காடாகவும் மாற்றுவ-ஏய்!... யாரப்பா நீங்களெல்லாம், ம்... உங்களுக்கு இங்க என்னா வேலை? உம் உம். போங்க... போங்க... [போகிறார்கள்] முத்தா! முதல்ல என் வாடகையைக் கொடு... முத்தன்: வாடகையா? இந்த சமயத்திலா கேட் கிறீர்கள்?... வேதாளம் : வேறு எப்போது கேட்பது ?... பொருள் இருக்கும்போதுதான் நீயே கொடுத்துவிடுவாயே, இல்லாதபோது கேட்டுத்தானே வாங்க வேண்டும்... முத்: ஒரு வேலையும் கிடைக்கவில்லை... வே: ஆமாம்!... இனிமேலும் கிடைக்காது... அதற்காக... முத்: கொஞ்சம் பொறுங்கள். 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/35&oldid=1723566" இலிருந்து மீள்விக்கப்பட்டது