34
34 வே: ஏ. முத்தா! புத்தியற்ற வாலிபனே! இந்த உலகத்தில் பொருள் தேடவா வழி இல்லை... முத் : திருடவா?... வே: சே! அள் திடகாத்திரனாய் தேகத்தில் நல்ல வலு இருக்கிறது... இருக்கிறாய்... முத்: பலதேவரை ஒரேயடியாக அடித்து வீழ்த்தி விடலாம்; இல்லையா?... வே: பைத்யக்காரா!... அதுவல்ல நான் சொல்வது. வேங்கைபுரத்தாரின் படையில் சேர்ந்து விடு என்கிறேன்! முத்: என்ன? படையிலா?!... தடுக்க வே: ஆமாம்! பாளையக்காரர் அதிகாரம் முடியாது...புகழ் வாய்ந்த வேலை... போர் வீரன் வேலை... முத்: போதும்.. போதும்.. நம்மை அடிமைப் படுத்தி இருக்கும் ஆதிக்கக்காரரின் சேனையிலே நான். சே! அதைவிட சாகலாம்! வே: ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் முட்டாள் கள்.நீதான் அறிவாளியா?... மாய்கைநாத சாமியாரே யுத்தப் பிரச்சாரம் செய்யப் போகிறார்... முத்: சாமியார்! செய்வார் சண்டையில் சாகப் போவது அவர் அல்லவே...அகனால்! வே: போதும்... நீ படையிலும் சேர வேண்டாம். எனக்கென்ன வேண்டாம். வந்தது? மாத்திரம் எப்படியாவது கொடுத்து விடு. ஒன்றும் வாடகையை என் நல்லவன் கேட்டுப் போகாதே-நான் போகிறேன்... பிரசங் D கம் கேட்க. மடாலயம் [போகிறான்] [ஊர் மக்கள் கூடியிருக்கிறார்கள். தளபதி, வேலழகர், மருத்துவர் பூபதி, வேதாளம் மற்றும் பலர் இருக்கிறார்கள். மாய்கை நாத சுவாமிகளின் சொற்பொழிவு நடை பெறுகிறது.]