பக்கம்:அம்மையப்பன்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

37 பூபதி : சாமியாரே! போகிறேன். சாமியாரே! ஒன்று மட்டும் நினைவிருக்கட்டும். பொய் கொஞ்சம் கொஞ்சமாகப் போதாகி மலரும்....ஆனால் உண்மை திடீரென்று வெடித்துவிடும்... ஹ.. ஹ ஹ வருகிறேன். .. (பூபதி போகிறார். சாமியார் பெருமூச்சு விட்டு பீடத்தில் உடலைப் போடுகிறார்.) அஞ்சல் மனை [முத்தன் பாடிக் கொண்டிருக்கும்போது அஞ்ச லோடி ஏதோ பைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே போகிறான் திரிசங்கு வருகிறான். திரிசங்கு: எங்கே முத்தன்? முத்தா! முத்தன்: ஆ! க திரிசங்கு: பயப்படாதே முத்தா. முத்தன்: பயமென்ன! அரண்மனையிலே ஏதாவது புதிய ஆணை பிறந்திருக்கும். திரிசங்கு: அரண்மனைக்கும். நான் வந்ததற்கும் தொடர்பே இல்லை. முத்தா, இங்கு யாருமில்லை அல்லவா? முத்தன் : இல்லை... என்ன விஷயம்? ன் திரிசங்கு: உனக்கும், என் மகளுக்கும் உண்மை யான அன்பு இருப்பது எனக்குத் தெரியும். முத்தன்: இப்போதாவது தெரிந்ததே! திரிசங்கு: கேள் முத்தா! முத்தாயி உன்னைத் தவிர வேறு யாரையும் மணக்க முடியாது என்று கூறிவிட்டாள். நீ வீசிய வலையில் வீழ்ந்து விட்டாள். முத்தன்: நான் வீசவும் இல்லை. அவள் விழவும் இல்லை...நாங்கள் இருவருமே காதல் வலையில் சிக்கி விட்ட புறாக்கள்! திரிசங்கு: அந்த வலையை அந்த வலையை அறுத்து என் மகளை விடுவிக்க வேண்டும். விடுவித்த பிறகும் அவளைத் துரத்தும் வல்லூறாக நீ இருக்கக்கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/39&oldid=1723571" இலிருந்து மீள்விக்கப்பட்டது