பக்கம்:அம்மையப்பன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 முத்தன் : துரத்தவேண்டிய தூரத்தில் அவள் இருக்க மாட்டாள். முத்தாயி என் தோளிலே தொத்தும் கிளி! என்னடா இது, மருமகப் பிள்ளை இப்படி கூச்ச மின்றி பேசுகிறான் மாமனாரிடம் என்று எண்ணுகிறீர்களா? மன்னிக்கவும். திரிசங்கு: கேள் முத்தா; நீதான் என் மானத் தைக் காப்பாற்ற வேண்டும். என் மகள் எப்படி வாழ வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் தெரியுமா? முத்தன் : உங்கள் எண்ணம் வாழ்க்கை நடக்கும்! போலவே எங்கள் திரிசங்கு ; நடக்காது முத்தா. நடக்காது. வீணாகக் கெடுக்காதே ஒரு குடும்பத்தை..நீ வாழ வகையற்றவன், வாழ முடியாதவன். என்னை விட்டுத் தள்ளு. உன்னைப் போல ஒரு ஏழைக்குப் பெண்கொடுக்க எந்த பித்துப் பிடித்த தகப்பனாவது ஒப்புக் கொள்வானா? உன்னால் நடத்த முடியுமா ஒரு குடும்பத்தை? நீயும் மனிதனாயிற்றே; கல்யாணம் பண்ணிக்கொண்டு மாமனார் வீட்டை எதிர் பார்த்துக் கிடக்க உனக்கு மானமில்லாமலா போய் விட்டது! உ ப 6 முத்தாயி சின்னப்பெண். உலகம் தெரியாதவள் காதல் பேசுகிறாள் இப்போது. கல்யாணமான பிறகு காதல் கீதம் எல்லாம் கதையைக் கட்டிவிடும். காதுக்கு வைரத் தோடு, கழுத்துக்கு முத்துமாலை - இப்படி மாறிவிடும் பெண்களுடைய புத்தி. முடியுமா உன்னால் அவைகளை வாங்கித்தர என்பெண்ணுக்கு. குடும்பம் இருக்கட்டும் திருமணத்திற்கு நிங்சயம் செய்ய ஒரு பொன் நாணயம் வைத்து புரோகிதருக்கு தட்சணை கொடுக்க வழியிருக் கிறதா உன்னிடம்? முத்தா! ஆத்திரமாகப் பேசுகிறேன் என்று நினைக்காதே; இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். அஞ்சல் மனையிலே வேலை பார்த்தாய். அதுவும் போய் விட்டது... அஞ்சல் மனைக்கு குதிரை தேய்த்து, அதற்குக் கூலியாக இந்த உள்ளங்கை போன்ற அறையிலே வசிக் கின்றாய். அந்த வேலையும் நீ பார்க்க முடியாது இனிமேல்; விட்டது. அஞ்சல் மனைக்கு குதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/40&oldid=1700452" இலிருந்து மீள்விக்கப்பட்டது