39
39 அரண்மனை உத்தரவு தடுக்கிறது. இனி வீட்டு நிழல்கள், மரத்தின் நிழல்கள் இவைதான் உனக்கு வாசஸ்தலம்! முத்தா! உன்வறுமையைப் பரிகசிக்கிறேனென்று கவலைப் படாதே, கவலையோடு கவலையாக இன்னும் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். நீ உணர்ந்து பார்ப்பதற்காக. உனக்கு வயதாகி இருந்து; உலகத்தோடு ஒட்டி ஒழுகும் பழக்க மிருந்து; உனக்கும் ஒரு மகள் இருப்பதாக வைத்துக்கொள் அந்தமகளை தகப்பன் பெயர் தெரியாத ஒரு மணமகனுக்கு மணம் செய்து கொடுப்பாயா? நீ செய்வாயோ என்னமோ. என்னால் முடியுமா? என் வைதீ க மனம் இடம் கொடுக் மா? யோசித்துப்பார்! உன் அம்மா காவேரி என்று தெரியுமே தவிர, அவள் உன்னை யாருக்குப் பெற்றாள் என்பது.. முத்தன்: போதும்! போதுமையா போதும்! திரிசங்கு: காதைப் பொத்திக் கொண்டு பயனில்லை. கண்ணை அகலமாகத் திறந்தும் பயனில்லை. கருத்துக் கத வைத் திற... கொஞ்சமாகத் திற, போதும். சீரும், சிறப்பும் சிங்கார மாளிகையும் அழைக்கிறது என் மகளை. நீ அதை மறுக்கிறாயா? மறுக்கிறாயா முத்தா? நீ மறுத்தால், அது அவள் மேல் உனக்குள்ள காதலுக்கு அடையாளமல்ல அவளை சீரழிக்க வேண்டு மென்ற உன் கொடிய எண்ணத் துக்குத்தான் அடையாளம். முத்தா! உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். அவளை மறந்து விடு... அவளை மறந்து விடு. முத்தன்: [அழுதபடி) ஆ! அய்யோ! மறக்கமுடியாத. மாணிக்கம், இழக்க முடியாத செல்வம்... அதையா மறந்து விடுவது?
திரிசங்கு: நீ மறக்கா விட்டால் முத்தாயி தன் தகப்பனை மறந்துவிட வேண்டும். அப்படி மறந்து விட்டால் மரக்கிளையிலே அனாதையாக அந்தரத்திலே அந்தரத்திலே தொங்கும் இந்த திரிசங்குவின் பிணம் உன்னை சபிக்கும்.. பிணம் உன்னை சபிக்கும்! க முத்தன்: அய்யா! என் உயிரை மறக்கச் சொல்கிறீர். மறந்து விடுகிறேன்.