40
திரிசங்கு: முத்தா! 40 முத்தன்: போய் வாருங்கள். [ திரிசங்கு பூரிப்புடன் அதை விட் டுப் போகிறான். முத்தன் குழப்ப மடைகிறான். தென்றல் மாளிகை (படையில் சேருவதற்காக ஆட்கள் வரிசையாக நின்று கொண்டிருக் கிறார்கள். ஒருவன் கையொப்பமிடு கிறான் தளபதியின் தளபதியின் முன்னால். அருகே வேதாளமும், அவன் எதிரே குறும்பனும் நிற்கிறார்கள்.] குறும்பன்: உம்... கையெழுத்து போட்டாகி விட் டது. நீ படையில் சேர்ந்து விட்டாய் என்று அர்த்தம். (அடுத்து ஒரு ஆள் கையெழுத்துப் போட வருகிறான்.) தளபதி: இனிமேல் விலகுவதாயிருந்தால் பொன் தண்டம் செலுத்த வேண்டும். ஆள்: நான் ஏங்க விலகப் போறேன்! தளபதி: பெயர் என்ன? ஆள்: சமரசம்! தளபதி : சண்டையில் சேருகிறாயா? ஆள்: ஆமாம். குறும்பன்: தகப்பனார் பெயர்? ஆள்: தீன தயாளர்; தாயார் அன்புக்கரசி. தளபதி: கையெழுத்திடு! நூறு (தளபதி எழுந்து மற்றவர்களை நோக்க ஆள் வரிசை காட்டப்படுகிறது.) தளபதி : சபாஷ்! வேதாளம்! இன்று நிறையத்தான் ஆட்களைக் கொண்டு வந்திருக்கிறீர்.