41
41 வேதாளம் : ஆமாம்! முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் பிரபு. (வேதாளம் ஒரு ஆளைக்காட்டித் தொட்டு) வேதாளம் : இவன் மிகவும் தைரியசாலி. தளபதி: அப்படியா! சைன்யத்தில் ஒரு சரியான இடம் காத்திருக்கிறது. வேதாளம்: இவனைப் பார்த்தீர்களா பிரபு? அடி விழுந்தாலும் நொறுங்காத அதிகம். பிரபு. நூறு மண்டை. தலைக்கனம் [ பக்கத்திலே உள்ள ஒரு ஆள் ] ஆள் : அப்ப யுத்த மந்திரியாக்கூட வரலாம். [வேதாளம் அவன் மார்பில் அடித்து] வேதாளம்: இவனுடைய நெஞ்சுறுதி அபாரம் [இருவரும் சிரித்துக் கொண்டே இருக் கிறார்கள். திடீரென வேதாளம் பார்க் கிறான். முத்தன் நிற்கிறான். திடுக்கிட்டு] வேதாளம்: யார் முத்தனா? முத்தன்: ஆமாம்! வேதாளம்: நீ..... முத்தன்: படையில் சேர வந்திருக்கிறேன். வேதாளம்: பேஷ்! பேஷ்! பெருமை ததும்பும் பிரபு அவர்களே! இவன் மிகவும் நல்லவன். இவனையும்...முத்தா! வா...வா... கையொப்பமிடு. [வேதாளம் மேசையிடம் ஓடி கையெழுத்துப் போட வேண்டிய ஏடுகளை எடுத்து வருகிறான். முத்தனிடம் அவைகளை நீட்டி] வேதாளம்: உம்... இதிலே கையெழுத்துப் போடு. தளபதி: பெயர் என்ன? முத்தன்: முத்தன். தளபதி : ம்... தகப்பனார் பெயர்? [முத்தன் விழிக்கிறான்)