42
42 வேதாளம் : ம்... அது ஒன்றும் தேவையில்லை பிரபு. தளபதி : ஒ! தாயார் பெயராவது...• முத்தன்: தாயார் காவோரியம்மாள். இறந்து விட் டார்கள். தளபதி : ம்... கையொப்பமிடு... [கையொப்பமிகிறான், "முத்தாயி என தவறிப் போடுதல்.] தளபதி : என்ன? முத்தாயியா? பயப்படாமல் போடு. ஹ...ஹ...ஹ... [முத்தன் கையொழுத்திடுகிறான்) ஆற்றீங்கரை சோலையோரம் (முத்தாயி, சுமதி இருவரும் தண்ணீர் குடத்துடன் வருதல் ] சுமதி : பாவம்... இரண்டு மூன்று நாட்களாக காத லனைக் காணாமல் ஒரே சங்கடமாய்த்தான் இருந்திருக்கும்... எங்கே...கை வளையல் கழலுகிறதா என்று பார்ப்போம். முத்தாயி: சுமதி, போதும்! சுமதி: ஏன், சொல்லச் சொல்ல வேதனையாயிருக் கிறதோ? முத்தாயி: அது எத்தகைய வேதனையென்று அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும். சுமதி: ஆண்டவனே! இந்த மாதிரி அனுபவங்கள் எனக்கு வரவேண்டாம். முத்தாயி: ஆண்டவனுக்கே வந்திருக்கிறதடி. (முத்தன் வருகிறான்) சுமதி: அதோ வந்துவிட்டார் உன் காதலர். முத்தாயி: சரி! சரி... சுமதி, நீ ஓடிவிடு. சுமதி: வரட்டுமே... எனக்கு ஒன்றும் வெட்கமில்லை. முத்தாயி: எங்களுக்கு இருக்குமடி... போய்விடடி. சுமதி : சரி! போகிறேன்... நான் குளித்து முடிவ தற்குள் வந்துவிடு.