44
44 வேடிக்கை காட்டி, என் மடியில் விளையாடி, என் விழியில் சதிராடும் மரகதமே! மாணிக்க மலர்க் கொத்தே! அந்த விளையாட்டெல்லாம் மண்மூடிப் போக வேண்டிய காலம் வந்துவிட்டது கண்மணி. முத்தாயி: என்ன... யார் பேசுவது இப்படி... என் முத்தனா? என் முத்தனா? முத்தன்: உன் முத்தனில்லை...முத்தன் பேசவில்லை; வேங்கை புரத்து வீரன் பேசுகிறான் கண்ணே, புரத்து வீரன் பேசுகிறான். முத்தாயி: ஆ! வேங்கைபுரத்து வீரன்! முத்தன்: ஆமாம்! முத்தாயி: என்ன
ஆமாம்?...யாரைக் கொண்டு வேங்கைபுரத்து வீரனாக மாறினீர்கள்? வேங்கை கேட்டுக் முத்தன் : நான் யாரைக் கேட்பது?... ஏழை முத்த னைக் கேட்டேன்... முத்தாயி மாளிகை ராணியாக வேண்டிய வள்...அவள் எண்ணத்தை விட்டு விடு என்றான்... காதல் முத்தனோ கண்ணீர் விட்டான்... கரகரத்த குரலிலே, கம்மிய தொனியிலே ஏழை முத்தன் கட்டளை யிட்டான்... முத்தாயியை மறந்துவிடு என்று "மறந்து விட்டேன் என் சிங்காரியை மறந்துவிட்டேன்... என் சிந்தையில் குடி யேறிய செல்வத்தை மறந்துவிட்டேன ... உன் தந்தைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேறு வழி இல்லை... வழி இருந்தால் பழுதூரை அடிமையாக்கி யிருக்கும் பகை வனின் படையிலே சேருவேனா நான். ம முத்தாயி: நீங்கள் மறக்கும்படியாக நான் என்ன குற்றம் செய்துவிட்டேன், பேராசைக்காரத் தகப்பனுக்குப் பெண்ணாகப் பிறந்ததைத் தவிர, காதல் என்றால் என்ன? கண்டவர் உருவத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியா? கலைத்து எழுதும் சித்திரமா? அழியாத ஓவியம் - அசையாத இமயம் காதல் என்று எண்ணியிருந்தேன்- பைத்தியக்காரத்தனந்தானா? சந்தைப் பொருளென என்னை எண்ணிவிட்ட தந்தைக்கும் உங்களுக்கும் என்னதான் வித்தியாச ம்? அது ஏன் சிலையாகி