பக்கம்:அம்மையப்பன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45 விட்டீர்க ள்? காதலன் மறந்துவிட்டான். காதலி வேறிடம் பறந்துவிட்டாள்; என்று என்சரித்திரம் முடியாது துரையே...அம்பிகாபதி காவியத்தை அழித்தெழுத எண்ணா தீர்கள். அரசன் மகள் அமராவதி மட்டுமல்ல காதலரே; அடிமையின் மகள் முத்தாயிக்கும் காதல் உள்ளம் இருக் கிறது! அதைக் காட்சியாக்கிக் காட்டுகிறேன் அதோ, அந்த ஆடும் மரக் கிளையில்... ஒடும் வெள்ளத்தில்... இரண்டிலொன் றில் என் பிணத்தைப் பார்க்கத் தயாராகிக் கொள்ளுங்கள்! முத்தன்: முத்தாயி; பட்டாளத்தில் பெயரைப்பதிவு செய்து விட்டேனே... என்ன செய்வது? முத்தாயி: செய்தால் என்ன? நூறு நூறு பொன் அப ராதம் செலுத்தினால் விலகிக் கொள்ளலாம் என்பது எனக்குத் தெரியும். முத்தன்: அபராதமா? முத்தாயி: ஏன் அபராதங் கட்டுவது அவமானம் என்கிறீர்களா? எதிர்நாட்டுக்குக் கூலிப்பட்டாளமாகச் செல் வதைவிட இது ஒன்றும் அவமானம் அல்ல... சிறைச் சாலைக்குப் பயந்து கட்டும் அபராதம் அல்லவே இது. முத்தன்: முத்தாயி! வ முத்தாயி: நான் சொல்வதைக் கேளுங்கள்; என் திருமணத்துக்காக நூறு பொன் அப்பா சேர்த்து வைத்து யாருக்கும் தெரியாமல் பூட்டி வைத்திருக்கிறார். அது இதற் கில்லாமல் வேறு எதற்கு? சுமதியிடம் கொடுத்து அனுப்பு கிறேன். அதை வாங்கி கட்டி விலகிக் கொள்ளுங்கள். முத்தன்: இதைக் கேள்... முத்தாயி: எதையும் எ கேட்க மாட்டேன்... நீங்கள் விலகவேண்டும்... இல்லாவிட்டால் நான்... முத்தன்: முத்தாயி; விலகி விடவா? முத்தாயி: என்னிடம் இருந்தல்ல... படையிலிருந்து இதை சாப்பிடுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/47&oldid=1723580" இலிருந்து மீள்விக்கப்பட்டது