பக்கம்:அம்மையப்பன்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

. 47 வேலழகன்: வேதாளம்; குறிப்பறிந்து புரிவதில் உமக்கு நிகர் நீரேதான். [அப்போது முத்தன் வருகிறான்] வேலழகன்: என்னப்பா! என்ன வேண்டும்? முத்தன்: என்னை மன்னிக்க வேண்டும். வேலழகன் : விஷயத்தைச் சொல்.

செயல் முத்தன்: சந்தர்ப்பம் சரியில்லை, படையிலிருந்து விலகிக் கொள்வதற்காக... வேலழகன் : என்ன விளையாடுகிறாய்? என்னை யாரென்று எண்ணிவிட்டாய்? படையில் சேரவும், விலகவும் உன் இஷ்டப்படி நடக்கவும் அனுமதி கிடையாது இங்கே! ஆளைப்பார் மலைபோல் இருக்கிறான்... எலிபோல் பயப்படு கிறான் கோழை... முத்தன்: தயவு செய்து அந்த வார்த்தை சொல்லா தீர்கள். நான் ஏழையாயி நக்கலாம். ஆனால் கோழையல்ல. நீட்டாதே! வேலழகன் : வால் மரியாதையாக நில்! மரியாதையாகப் பேசு. வாள் LA ம் முத்தன்: படையில் சேருவதற்கு கட்டாயம் எதுவு மில்லையல்லவா? வேலழகன்: சேருவதற்குக் கட்டாயமில்லை ஆனால் சேர்ந்து விலகுவது உன் இஷ்டமில்லை. முத்தன்: அதற்குத்தான்

நூறு பொன் தண்டம் செலுத்திட வேண்டுமென்று நிபந்தனையிருக்கிறதே. வேலழகன்: [வேதாளத்திடம் ] நிபந்தனையை இவன் எனக்கு நினைவூட்டுகிறான் திமிர் பிடித்தவன். (முத்தனிடம்) இத்த தேகத்தை வளர்த்து என்ன செய்யப்போகிறாய்? தேசத்திற்காகத்தான் பலிகொடேன். முத்தன்; பலிகொடுக்கலாம்; எமக்கென்று ஒருதேசம் இருந்தால்! எமது நாட்டைக் காக்க வேண்டுமென்ற போர் மூளுமானால் அந்த முன்னணியிலே முத்தனின் பெயர்தான் முதல் இடம்பெறும். பழுதூர் அடிமை பூமி; அதைக் காலில் போட்டு மிதித்து கப்பம் பாங்கும் நாட்டுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/49&oldid=1723582" இலிருந்து மீள்விக்கப்பட்டது