3
அம்மையப்பன்
★
கதை வசனம்
மடாலய வெளிப்புறம்
ஒரு கோச் வந்து நிற்கிறது. பலதேவர், ராணி, எல்லோரும் இறங்கி உள்ளே செல்கின்றனர். கோச்சை ஓட்டிவந்த முத்தனும் இறங்குகிறான். அவன் குல்லாயை எடுக்கிறான். அதிலிருந்து படம் ஒன்று விழுகிறது. சுகதேவ் கண்டு விடுகிறான்.
சுக : ஏ! —— முத்தா ! என்ன படம் இது?
முத்: ஒன்றுமில்லை...
சுக : ஏ!... சும்மா காட்டு; பார்க்கலாம்... [காட்டுகிறான்.]
சுக : அடேடே !...முத்தா ! நான் இதுமாதிரி ஒரு படம் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் எங்கேயோ பார்த்தது போலே ஞாபகம் !...
முத்: இப்போது நீங்கள் காணப்போகும்... இந்தப் படம் என் லட்சியக் கனவு... இன்ப விடிவெள்ளி... இரண்டொரு வாரங்களுக்கு முன் நீங்கள் பார்த்த படம் இந்தப் படத்தின் இன்னொரு பிரதி—— முற்றுப் பெறாத சித்திரம்...
சுக : ஒகோ ! அதுவும் உன்னுடையதுதானா?
முத்: ஆமாம் முன்னது கை தவறிப்போய் களவாடப்பட்டு விட்டது... ! நான் வேறு எழுதிக் கொண்டேன். அது... இது..