48
48 தளபதி நீர். அந்தப் படையிலே நான் இருப்பதும் ஒன்று தான்... வேலழகன் : என்ன சொன்னாய். ராஜதுரோகி? முத்தன் : சே ே காதரத் தூரோகிக்கே ஆழ்வார் பட்டம் கிடைத்திருக்கிறது. தளபதி அவர்களே; நான் துரோகி இல்லை! எமது நாட்டை அபகரித்தவரின் அணி வகுப்பில் பணிபுரிய மாட்டேன் என்பது துரோகமா? வேலழகன்: ஆ! என்னை எதிர்த்துப் பேசிய முதல் ஆள் இவன்தான். இவனுக்கு ஒரு முடிவு தேடாமல் விட மாட்டேன். வேங்கை புரத்து அரசாட்சிக்கு எதிராகக் கிளம்பும் இம்மாதிரி விஷவித்துக்களை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். இவனுக்கென்று ஒருதேசமாம்; அந்த தேசத்தின் விடுதலைக்குத்தான்பாடுபடுவதானாம். வெளியிலே உலவுகிறான், பைத்தியக்கார விடுதியிலே இருக்க வேண்டி யவன். முத்தன் : உங்களைப் போன்றவர்களுக்கு வைத்தியம் செய்வதற்காக வேலழகன்: சீ! காட்டுமிராண்டி முத்தன் : காட்டுமிராண்டி! நிலைக்கண்னாடியைப் பார்த்து நீரே சொல்லிக்கொள்ளும் அந்த வார்த்தையை! (வேலழகன் பதட்டம்- துடிப்பு) வேதாளம்: கொஞ்சம் இப்படி வாருங்களேன். (தனியாக இருவரும்) வேதாளம்: பயலை விடாதீர்கள். விட்டால் தண்டப் பொருளை கட்டி தப்பிவிடுவான். பிறகு முத்தாயியைப் பிடிக்க முடியாது, வேலழகன் : என்ன செய்யலாம்? வேதாளம்: காவலில் போடுங்கள்
கழுதையை... க ஆனால் ஒன்று...நான் இந்த நாய்க்குட்டியிடம் நல்லவனாக நடந்து கொள்கிறேன். அதாவது நடிக்கிறேன் என்கிறேன். [பிறகு இருவரும் முத்தன் இருக்குமிடத்திற்கு வருகிறார்கள். வரும் போதே]