49
49 வேலழகன்: வேதாளம்! இது பட்டாளத்து விஷ யம், உமது சிபார்சுக்கு இங்கு இடமேயில்லை.
வேதாளம்: தயவு செய்து மன்னித்து விடுங்கள். முத்தன் ஏழை. வேலழகன்; வேதாளம்! திரும்பத் திரும்பசொல்லு கிறேன். நீர் இதில் தலையிடக்கூடாது.
வேதாளம்: ஏன் தலையிடக்கூடாது? தங்களுக்குத் தரவேண்டிய நூறு பொன்னைக் கொடுத்துவிட்டால் முத்தனை நீங்கள் என்ன செய்யமுடியும்? ஏன் முத்தா ! நூறு பொன் கொடுத்துவிடேன். முத்தன்: காலையில் தந்து விடுகிறேன். வேதாளம்: அங்! தளபதி அவர்களே! போகலாமல்லவா இப்போது! வேலழகன் : முத்தன் கூடாது... தண்டப் பொன்கள் வந்து சேரும் வரையில் அவன் இங்கேயேதான் இருக்கவேண்டும். வேதாளம்: அய்யோ! பெருமைக் குரிய பிரபு அவர்களே! அவனை விட்டு விடுங்கள். நானே நாளை காலை யில் பொன்களைத் தந்து விடுகிறேன். விடு வேலழகன்: முடியாது... வேலழகன் உத்தர வி கிறேன்.ஏய்,யாரங்கே! இவனைக் காவலில் வையுங்கள். முத்தன்: இப்படித்தான் சொல்லுகிறதா உங்கள் அரசாங்கத்தின் பாசறை நீதி? நன்றாயிருக்கிறது. வேலழகன்: பேசவிடாதீர்கள். போட்டு மூடுங்கள் இந்தக் குறும்பனை. கூணடுக்குள் [முத்தன் கைகளில் விலங்கு மாட்டப் படுகிறது. வேதாளம் தன் முகத்தை மூடிக் கொண்டு வெளிக்கிளம்புகிறான். அவன் போகும் போது முத்தனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டே வேதாளம்: முத்தா! முன் ஜென்ம கர்ம வினை முடி சூடிய மன்னனையும் விடாது.