50
50 (என்று கூறிவிட்டுப் போகிறான். முத்தன் தென்றல் மாளிகையின் ஒரு அறையில் அடைக்கப்பட்டு- வெளியேகாவல் போடப்படுகிறது.] தோட்டம் [முத்தாயி பொன் மூட்டையுடன் வருகிறாள். சுமதியைப் பார்த்து.] முத்தாயி: சுமதி! வா வா! நல்ல நேரத்தில் வந்தாய்! சுமதி : என்ன அமிர்த யோகமா? முத்தாயி: ஏய், ராகு காலம்! சொல்றதைக் கேளு!... இதிலே நூறு பொன் இருக்கிறது. எப்படியாவது டம் சேர்த்துவிட வேண்டும்... சுமதி: முத்தனிடம் தானே...
அவரி முத்தாயி: வேறு யாரிடம்? சீக்கிரம் போ, சுமதி!... சுமதி : ஆகா... ஆகா!... என்ன அவசரம்! (போகிறாள்) முத்தாயி: (தனக்குள்) பொன் கிடைத்ததும் என் கண்ணாளர் படையிலிருந்து விலகி விடுவார்... விலகியதும் அப்பாவிடம் எப்படியாவது கெஞ்சிக்கேட்டு எங்கள் விவா கத்தை நடத்திக் கொள்வோம். விவாகம் ஆனபிறகு... ஆகா! அந்த விருந்தை நினைக்கவே நெஞ்சு இனிக்கிறதே... தென்றல் மாளிகை [தென்றல் மாளிகையில் முத்தன் அடைபட்டுக் கிடக் கிறான். வேதாளம் நுழைகிறான்.) வேதாளம்: முத்தா! என்ன முட்டாள்தனம் செய்து விட்டாய்! முதலிலேயே யோசித்துச் செய்யக் கூடாது? உன்னை என்ன பலவந்தமாகவா படையில் சேர்த்தேன் நான். வேலழகன் ஒரு முாடன். நீயோ பாபம் மிகவும் நல்லவன். நியாயப்படி உன்னைக் காவலில் வைக்கக்கூடாது. இந்த அநியாயத்தை யார் கேட்பது? பாளையக்காரரிடம் ஓடிப்போய் சொன்னேன். அவர் என் பேச்சை லட்சியம்