51
51 செய்யவே இல்லை.ஏழையின் குரல் ஏழடுக்கு மாளிகையில் எப்படிக் கேட்கும்? [அப்போது வேலழகன் வருகிறான்) வேலழகன் : என்ன வேதாளம்! என்ன மலைக்கிறீர்? நீர் பார்த்து விட்டுத்தான் போகலாம் ஆசையிருந்தால். அவ னுடன் நீர் பேசுவதற்கு அனுமதியில்லை. முத்தன் இப் போது கூண்டுப் பறவை. வேதா: முத்தன் என்னுடனேயே இருந்தவன் பிரபு. மேன்மை தங்கியவரே! பழகிய பாசம் மிகவும் பொல்லாதது அல்லவா! எப்படியாவது மன்னித்து வேலழ : ஹா...ஹா... மன்னிப்பதா? இதோ பாரும் அரசாங்க உத்தரவை. இதுவரை சேர்ந்துள்ள படைவீரர் களோடு நான் உடனே தலைநகருக்குப் புறப்படவேண்டு மென்று கட்டளை பிறப்பித்துள்ளார் மன்னவர். இன்றே புறப்படவேண்டும். வேதா: முத்தனுமா? வேலழ: ஆமாம்! ஆனால் தண்டப்பணம் நூறு பொன் வந்துவிட்டால் இவன் விடுதலை பெறலாம்... ஹும்... இவனுக்கேது நூறு பொன்... குப்பையில் கிடப்ப வன்! [வேலழகன் போகிறான். வேதாளம், முத்தன் தன்னை நம்புவதற்காக நடிக்கிறான்] வேதா : ஹும். முத்தா! உன்னைப் பார்க்கவே எனக் குக் கஷ்டமாக இருக்கிறது அப்பா. முத்: ஐயா! எனக்கு ஒரு உதவி செய்கிறீர்களா? வேதா : என்ன உதவி? சொல்... செய்து கிறேன். முடிக் முத் : என்னிடம் கொடுக்கச் சொல்லி நூறு பொன் வரும். அதை வாங்கி கட்டி எப்படியாவது என்னை விடுதலை செய்து விடுங்கள். வேதா : அதைவிட எனக்கு வேறு வேலை? பொன் கட்டாயம் வருமல்லவா?